ஆன்லைன் சூதாட்டத்திற்காக மடத்தில் கைவைத்த மடாதிபதி!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஆன்லைன் சூதாட்டத்திற்காக முப்பது லட்சம் பாத்களை கையாடல் செய்ததாக தாய்லாந்தின் பௌத்த மடாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் மிகவும் பாரம்பரியமான பௌத்த மடாலங்களில் வாட் ராய் கிங் மடாலயமும் ஒன்று. இந்த மடாலயத்தின் மடாதிபதியான ஃபிரா தர்மா வச்சிரானுவத் என்ற எழுபது வயது துறவியே பெருமளவில் பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதிப்புமிக்க பௌத்த துறவியான ஃபிரா தர்மா வச்சிரானுவத் மடாலய நிதியை தவறாக கையாள்வதாக வந்த ரகசியத் தகவலையடுத்து, தாய்லாந்து பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் மேற்படி மடாலயத்தில் பணியாளர் போர்வையில் உளவு பிரிவு அதிகாரி ஒருவரை வேலைக்கு அனுப்பினர். இவ்வாறு மடாதிபதியின் நடவடிக்கைகளைக் கண்காணித்த அவர்கள் அவர் பல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டு வந்ததை உறுதி செய்த பின்னர் அவர்மீது வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். குற்றத்தின் தன்மை கருத்தி நீதிமன்றமும் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்திருந்தது.இந்த நிலையில் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொண்ட மடாதிபதி ஃபிரா தர்மா வச்சிரானுவத் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மதிப்பிற்குரிய துறவியான ஃபிரா தர்மா வச்சிரானுவத் ஆன் லைன் சூதாட்டத்தில் மோகங்கொண்டு மடாலய நிதியை தன் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றியதோடு அதை இடைத்தரகர்கள் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் முதலீடு செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com