மாஸ்க் அணிந்து ஷாலினியுடன் செல்லும் அஜித்: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Friday,May 22 2020]

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தனிமனித இடைவெளி மற்றும் வீட்டுக்குள்ளேயே இருத்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. இதனை அடுத்து கோடிக்கணக்கான மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தனர் என்பதும் தற்போது தான் ஓரளவுக்கு வெளியே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக திரையுலக பிரபலங்கள் பலரும் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டை விட்டு வெளியேறவில்லை. குறிப்பாக மாஸ் நடிகர்கள் கொரோனாவின் தாக்கம் முழுமையாக முடிந்த பின்னரே வெளியே வருவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தல அஜீத் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் மாஸ்க் அணிந்து வரும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ’வலிமை’ படத்தின் அப்டேட் எதுவும் இல்லாமல் அதிருப்தியில் இருக்கும் தல அஜித்தின் ரசிகர்கள் தற்போது இந்த வீடியோவை வைரலாக்கியும், சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ராயபுரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அமைச்சர் ஜெயகுமாரின் அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9000ஐ நெருங்கி விட்டது

போராடி தோத்துட்டேன்னு சொல்றதுக்கு இது கேம் இல்லை: பொன்மகள் வந்தாள் டிரைலர்

நடிகை ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

ஜிவி பிரகாஷ்-கவுதம் மேனன் படத்தில் நாயகியாகும் 'பிகில்' நடிகை!

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் ஒருசில படங்கள் ரிலீசுக்கு தயாராக இருப்பதும் தெரிந்ததே..

தயவுசெய்து இதைமட்டும் யாரும் செய்யாதீங்க: தமன்னா வேண்டுகோள்

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா, இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே

1 கோடியே 70 லட்சம் பேரை காவு வாங்கிய ஸ்பானிஷ் ஃப்ளூ!!! நோயிலிருந்து இந்தியா மீண்ட கதை!!!

இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் ஸ்பானிஷ் காய்ச்சல் உலகம் முழுவதும் 5 கோடி மக்களை கொன்று குவித்ததாக உலகச் சுகாதார அமைப்பும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையமும் தகவல் தெரிவிக்கிறது.