close
Choose your channels

ஒரே வாரத்தில் ஒன்பது கோடி ரூபாயை நெருங்கிய 'அறம்' வசூல்

Saturday, November 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் கோபி நயினார் இயக்கிய 'அறம்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ஊடகங்கள், விமர்சகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பாராட்டை பெற்று இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகின்றது. சென்னையில் இந்த படத்தின் முதல்வாரயிறுதி வசூல் ரூ.1 கோடியை தாண்டியது என்பதை ஏற்கனவே பார்த்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஒரே வாரத்தில் இந்த படம் ரூ.9 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் கிடைத்துள்ளது.

'அறம்' திரைப்படம் கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் ரூ.1.79 கோடியும், செங்கல்பட்டில் ரூ.3.2 கோடியும், கோவையில் ரூ.1.9 கோடியும், திருச்சி-தஞ்சை பகுதியில் ரூ.51 லட்சமும், நெல்லை-குமரி பகுதியில் ரூ.18 லட்சமும் வசூலாகியுள்ளது. மொத்தத்தில் தமிழகம் முழுவதும் இந்த படத்தின் வசூல் சுமார் ரூ.9 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இந்த படத்தின் வசூல் அபாரமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இன்று பிறந்த நாள் கொண்டாடும் நாயகி நயன்தாராவுக்கு இந்த படத்தின் வெற்றியை விட சிறந்த பிறந்த நாள் பரிசு இருக்க முடியாது என்றே கருதப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.