ஒரே காரில் 25 பேர் பயணம் செய்தபோது நடந்த கொடூரம்!

  • IndiaGlitz, [Wednesday,March 03 2021]

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரே காரில் 25 பேர் பயணம் செய்து உள்ளனர். இந்தக் காரின் மீது பின்னால் வந்த டிரக் ஒன்று மோதியதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம் ஏற்பட்டு உள்ளது. மேலும் ஒருவர் சிகிச்சையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

கலிபோர்னியா மாகாணத்தை ஒட்டியுள்ள மெக்சிகோ எல்லைக்கு அருகே நேற்று அதிகாலை இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க மேலும் ஒருவர் சிகிச்சையின்போது பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

முன்னதாக டெக்சாஸ் மாகாணத்தில் நிகழ்ந்த கடும் பனிப்பெழிவினால் 135 கார்கள் ஒன்றின்மீது ஒன்று மோதிய சம்பவமும் அமெரிக்காவில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது மேலும் ஒரு கார் விபத்து நடந்து இருக்கிறது. இந்த விபத்தில் ஒரே காரில் 25 பேர் பயணம் செய்ததும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News

உலகின் மிகப்பெரிய ஐடி ஊழலின் கதை: காஜல் அகர்வாலின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

உலகின் மிகப்பெரிய ஐடி ஊழல் கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்று தமிழ், தெலுங்கு, ஹிந்,தி கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்ஹிட் மலையாள படத்தின் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

கடந்த ஜனவரி 15ஆம் தேதி மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன். ஜியோ பேபி என்பவர் இயக்கிய இந்தப் படத்தில் நிமிஷா சுரேஷ் உள்பட பலர் நடித்து இருந்தனர்.

நகைக்கடன் நிலுவை விவரங்களை அனுப்புமாறு கூட்டுறவுத் துறை உத்தரவு!

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 26 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார்.

சரத்குமார் கட்சியில் ராதிகாவுக்கு முக்கிய பொறுப்பு!

நடிகர் சரத்குமார் கடந்த 2007ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சி, அதிமுகவுடன் கடந்த 10 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

பாலிவுட் முன்னணி நடிகையின் ஸ்டன்னிங் போட்டோ ஷுட்… வைரல் புகைப்படம்!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை வித்யா பாலன் சிறந்த நடிப்புக்காக தொடர்ந்து பாராட்டப் படுகிறார்.