யூயார்க்கில் சிறந்த உணவகம் - விருதைத் தட்டிச் சென்ற தமிழ் உணவகம்- 'செம்ம'


Send us your feedback to audioarticles@vaarta.com


நியூயார்க்கில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த ரெஸ்ட்ராண்ட் விருதை ஒரு தென்னிந்திய உணவகம் பெற்றுள்ளது. உயர்தர உணவகங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் மிச்செலின் நட்சத்திர அந்தஸதை பெற்ற ”செம” என்ற இந்த உணவகம், நியூயார்க்கில் தென்னிந்திய உணவுவகைகளுக்கு பிரசித்தி பெற்றது. நியூ யார்க் டைம்ஸ் வருடம் தோறும் பட்டியலிடும் சிறந்த 100 உணவகங்களின் தர வரிசையில் இந்த ஆண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சாதனை என்றே சொல்லலாம். 2024 ஆம் ஆண்டு &ஆவது இடத்தைப் பிடித்த இந்த உணவகம், இந்த ஆண்டு முதலிடத்தை எட்டியுள்ளது. சிறந்த 100 உணவகங்களின் தரப் பட்டிட்யலில் மொத்தம் நான்கு இந்திய உணவகங்கள் இடம்பெற்ரன.
ப்ரியா கிருஷ்ணா, மெலிஸா க்ளார்க் மற்றும் ப்ரையன் கல்லகர் ஆகிய மூவர் கொண்ட குழு, இந்த ஆண்டு தரப்பட்டியலை உருவாக்கி இருந்தது. சிறந்த உணவகங்களை தேர்ந்தெடுக்க அவர்கள் மூன்று அடிப்படைக் கேள்விகளை பயன்படுத்தினர். அவை: “நமது நண்பர்களுக்கு எந்த உணவகத்தைப் பரிந்துரைப்போம்? பணத்தை செலவழித்தாலும் தகுதி தான் என்று எண்ணவைக்கும் உணவகம் எது?ஒரு மணிநேரம் பிரயாணம் செய்தாலும் அங்கு போய் சாப்பிட வேண்டும் என்று நினைக்க வைக்கும் உணவகம் எது?
இந்த கேள்விகள் அனைத்திற்கு சிறந்த பதிலாக அமைந்த ”செம” முதலிடத்தைப் பெற்றது. க்ரீன்விச் கிராமத்தில் அமைந்த இந்த உணவகத்தின் உரிமையாளர் விஜயகுமார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஒரு செழுமையான சமையல் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாட்டிற்கே உரிய அபூர்வ உணவுவகைகளுக்கு இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உணவு விமர்சகர் ப்ரியா கிருஷ்ணா இது பற்றி கூறுகையில்,”நியூயார்க்கில் இந்திய உணவகங்களுக்கு குறைவே இல்லை. ஆனால், ”செம” ஆரம்பிக்கப் படுவதற்கு முன்னால், இங்குள்ள உணவுப்பிரியர்கள் இது போன்ற இந்திய உணவுவகைகளைப் பார்த்ததேயில்லை. மிளகாய், தேங்காய், கமகம கருவேப்பிலை என்று வாசனையும் சுவையும் சுண்டி இழுக்கும் உணவுவகைகள்! நியூயார்க்கிலேயே இங்கு கிடைக்கும் தோசை தான் பெஸ்ட். மொறுமொறுவென பளபளக்கும் தோசையில் உருகும் வெண்ணெயும், அதோடு கலக்கும் சட்னி, சாம்பாரும் தனிரகம். ”செம”இந்திய சாப்பாட்டு அனுபவத்தை தலைகீழாக மாற்றிவிட்டது என்றவர், “ நான்கு வருடங்கள் ஆகியும் இன்னும் “செம” உணவுவகைகள் சுவை மாறாமல் இருக்கின்றன” என்றார்.
“செம” உணவகம் இதுவரை பல விருதுகளை வாங்கி விட்டது. அடுத்தடுத்து மூன்று வருடங்களாக மிச்செலின் நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. நியூயார்க்கில் இந்திய உணவகங்கள் பல இருந்தாலும், மிச்செலின் நட்சத்திர அந்தஸ்து பெற்ர ஒரே இந்திய உணவகம் இது தான்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com