வெற்றிமாறன் படத்தில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்… காரணம் என்ன???

 

தமிழ் சினிமாவில் காமெடி நட்சத்திரமாக வலம் வரும் சூரி முதல் முதலாக வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். வெற்றிமாறன்-சூரி கூட்டணியில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் ஏற்கனவே தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். அதோடு இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது அவர் உடல் நிலை காரணங்களுக்காக அந்தப் படத்தில் இருந்து விலகுவதாகத் தெரிவித்து உள்ளார்.

காரணம் இப்படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே குளிர் காலமாக இருப்பதால் அவரின் உடல்நிலை மேலும் பாதிப்படையக் கூடும் எனக் கருதி அவர் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடிக்க உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

முன்னதாக வெற்றிமாறன், எழுத்தாளர் பூமிணியின் “வெக்கை” நாவலை “அசுரன்” திரைப்படமாக இயக்கி இருந்தார். அதேபோல தற்போது எழுத்தாளர் ஜெயமோகனின் “துணைவன்” எனும் சிறுகதையை மையப்படுத்தி சூரியை நாயகனாகக் கொண்டு தனது புதிய படத்தை இயக்கி வருகிறார். அதோடு வெற்றிமாறனின் கூட்டணியில் முதல் முறையாக இசைஞானி இசையமைக்கிறார். இப்படத்திற்காக அவர் 8 பாடல்களை தயார் செய்து கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அசுரன் பட வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் பாவக்கதைகள் எனும் ஆந்தாலஜி படத்தை இயக்கி இருந்தார். அடுத்து சூர்யாவின் வாடிவாசல், தற்போது சூரி நாயகனாக நடிக்கும் படம், தனுஷ் உடன் புதிய கூட்டணி என வெற்றிமாறன் படு பிசியாக இருக்கிறார். இந்நிலையில் வெற்றிமாறமன்- சூரி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பை ஒரே மாதத்திற்கு முடிக்க அப்படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

உலகில் இதுவே முதல்முறை… தஞ்சை மாணவனைப் பார்த்து பிரமித்துப்போன  நாசா!!!

தஞ்சையைச் சேர்ந்த இளம் மாணவர் ஒருவர் உருவாக்கிய சாட்டிலைட் மாடல்களைப் பார்த்து நாசா விஞ்ஞானிகளே அதிர்ந்து போயுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் நாளை முதல் ஃப்ரீஸ் டாஸ்க்: யார் யாருக்கு எந்த பாடல்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்களின் உறவினர்கள் போட்டியாளர்களை சந்திக்கும் நிகழ்வுகள் இடம்பெறும் என்பதும் உறவினர்கள் வீட்டின் உள்ளே வரும்போது சம்பந்தப்பட்ட போட்டியாளர்

பூமியில் கிடைக்காத ஒரு பொருளை பரிசாகக் கொடுத்த கணவன்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

பூமியில் இல்லாத ஒரு பொருள் என்றால் அதற்காக விண்வெளிக்குத்தான் போக வேண்டும்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்பு: திரையுலகினர் இரங்கல்!

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 

ஆறடியில் ஒரு கேக் சிலை… மரடோனாவை கவுரவித்த தமிழர்!!!

மறைந்த கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பேக்கரி கடைக்காரர் ஆறடியில் கேக் சிலையை வடிவமைத்து உள்ளார்.