close
Choose your channels

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட ஒருவர் ரத்ததானம் செய்யலாமா?

Wednesday, June 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பு விருப்பம் உடைய இளைஞர்கள் இரத்ததானம் செய்ய முன்வரவேண்டும் என கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பு செய்தி வெளியாகி வருகிறது.

காரணம் கொரோனா பரவல் காலக்கட்டத்தில் நாம் எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டி வருகிறோம். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்போது ஒரு நபரால் இரத்ததானம் செய்ய முடியாது என மருத்துவர்கள் கூறிவருகின்றனர். இதனால் அவசரத்தேவைக்கு இரத்தம் கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்படலாம்.

சாலை விபத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகள், பிரசவ நேரத்தில் ரத்தக் கசிவு ஏற்படுதல் எனப் பல்வேறு தேவைகளுக்குத் தொடர்ந்து இரத்தம் தேவைப்படுகிறது. எனவே முடிந்தவரை இரத்ததானம் செய்ய முன்வாருங்கள் என சமூகநல ஆர்வலர்கள் பலரும் கூறிவருகின்றனர். அதேபோல நேற்று ஜுன் 14 உலக இரத்ததானம் தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப் பட்டது. இதையொட்டி இரத்ததானம் செய்வது குறித்து விழிப்புணர்வு வாசகங்களை உலகச் சுகாதார அமைப்பு பரப்பியது.

இந்நிலையில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஒரு நபர் முதல் டோஸ் செலுத்திக் கொண்டு அடுத்த 28 நாட்களுக்குப் பின்னர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வார். இதற்கு இடைப்பட்ட 56 நாட்களிலும் இரத்ததானம் செய்ய முடியாது. அதேபோல கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர் ஒதுக்கப்பட்ட கால இடைவெளிக்குள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக முடித்தப் பின்பே இரத்ததானம் செய்ய முடியும்.

இதனால் ஒரு நிண்ட இடைவெளிக்கு இரத்ததானத்தை செய்யமுடியாது. மேலும் 2 ஆவது டோஸ் செலுத்திக் கொண்ட உடனேயே இரத்ததானம் செய்யலாம் என இந்திய மருத்துவக் கவுன்சில் நெறிக்காட்டுதலில் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கும் சில மருத்துவர்கள் இப்படி இரத்தானம் செய்வதால் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டபோதே கொரோனாவிற்கு எதிரான ஆன்டிபாடிகள் உடலில் தோன்றி இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் கொரோனாவில் இருந்து மீண்ட நபர்கள் இரத்ததானத்தை செய்யக்கூடாது என இந்திய மருத்துவக் கவுன்சில் குறிப்பிடவில்லை. இதனால் கொரோனாவில் இருந்து மீண்ட ஒரு நபர் 6 வாரங்கள் கழித்து எப்போதும் போல இயல்பாக இரத்ததானத்தை செய்யலாம்.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் நெறிமுறைகளின் படி இந்தியாவில் உள்ள 18-65 வயதிற்கு உட்பட்ட யாரும் இரத்ததானம் செய்யலாம். ஆனால் 60 வயதிற்கு மேற்பட்ட ஒரு நபர் முதல் முறையாக இரத்ததானம் செய்யக்கூடாது. மேலும் 65 வயதிற்கு மேற்பட்ட எவரும் இரத்ததானம் செய்யக்கூடாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos