ஊரே கொண்டாடிய மனிதர் கொலைகாரனானது ஏன்?


Send us your feedback to audioarticles@vaarta.com


அயர்லாந்தில் 2016 ஆம் ஆண்டு மனைவியையும் குழந்தைகளையும் கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட பள்ளித் தலைமை யாசிரியரின் உறவினர் இப்போது அவரைப் பற்றிய உண்மைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
அயர்லாந்தின் கேவன் ஹோம் மாவட்டத்தில் ஆலன் ஹவ்(40) என்ற மிகவும் மதிக்கப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் 2016 ஆகஸ்ட் மாதம், தமது மனைவி க்ளோடாவை வெட்டி கொலை செய்த பின், தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் லயாம்(13) நியால்(11) ரையன்(6) மூவரையும், கழுத்தை அறுத்து கொன்றதுடன் தானும் தற்கொலை செய்து கொண்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
கேஸில்ரஹான் நேஷனல் பள்ளியின் மரியாதைக்குரிய தலைமையாசிரியர், ஊரில் எல்லோரும் ஆலோசனை கேட்டு தேடி வரும் பெரிய மனிதர், கத்தோலிக்க தேவாலயத்தில் முக்கிய உறுப்பினரும், மிகுந்த பக்திமானும் ஆன ஆலன் ஹவ்வுக்கு இன்னொரு அருவருப்பான முகம் இருந்தது என்கிறார் இந்த புத்தகத்தை எழுதிய ஜாக்குலின் கொன்னலி. இவர் ஆலன் ஹவ்வின் மனைவி, க்ளோடாவின் தங்கை.
இவர் தமது புத்தகமான “டெட்லி ஸைலன்ஸ்” ல் ஆலன் ஹவ் போர்னோக்ராஃபி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததே இந்த கொலைகளுக்குக் காரணம் என்கிறார். அவரது இந்த பழக்கமும் இன்னும் சில இயல்புக்கு மாறான பழக்கங்களும் வெளியில் தெரியும் நிலை வந்ததால் அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்ற ஜாக்குலின், தாமறிந்த ஆலன் மிஞ்சின பக்திமான், பரிசுத்தர் என்று ஏளனம் நிறைந்த வேதனையுடன் குறிப்பிட்டார்.
பக்திமிக்க கத்தோலிக்கராக, “சமுதாயத்தின் தூணாக” தன்னைக் காட்டிக் கொண்ட ஆலன் மூடிய கதவுகளுக்குப் பின்னால், மனைவியின் உடைகளை அணிந்த படி, ரஷ்ய டேட்டிங் வெப் ஸைட்டுகளில் சாட் செய்து கொண்டு, ஆபாசப் படங்களில் மூழ்கி இருப்பார். இதற்காகவே அவர் பல மறைவான ஈமெயில் கணக்குகளை வைத்திருத்தாக ஜாக்குலின் குறிப்பிடுகிறார்.
கொலைகளை செய்து முடித்த பின், ஒரு குறிப்பையும் எழுதி வைத்திருந்தார். “நாங்கள் சந்தோஷமாகவே வாழ்ந்தோம். நான் என் குடும்பத்தை மிகவும் நேசித்தேன். ஆனால், ஒரே விநாடியில் என்னை அடியோடு மாற்றிவிடும் ஒரு மனநோய் எனக்குள் இருக்கிறது. என் குடும்பத்தைக் கொன்ற விதத்திற்காக நான் வருந்துகிறேன். ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
தாம் “கையும் மெய்யுமாக” பிடிபட்டதால், அவர் ” இனி பள்ளியில் எல்லாம் கட்டுமீறிப் போய்விடும் ‘என்று அஞ்சுவதாகவும் எழுதியுள்ளார். பள்ளியில் சுயமைதுனம் செய்தபடி போர்னோ கிராஃபியில் ஆழ்ந்திருந்த போது பிடிபட்டதாக சில குறிப்புகள் தெரிவித்தாலும், பள்ளிநிர்வாகம் அதை மறுத்துள்ளது.
தன்னுடைய ரகசிய வாழ்க்கை வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் அவர் மொத்த குடும்பத்தையும் கொன்றிருக்கலாம் என்று எண்ணப் படுகிறது.
ஜாக்குலின் தமது புத்தகத்தில் ’ஐரிஷ் காவல்துறை, இந்த மரணங்கள் குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ளவில்லை என்றும், தீவிர குற்ற மறுஆய்வுக் குழு செய்த விசாரணையின் முடிவுகளை வெளியிடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாக’வும் குற்ப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com