close
Choose your channels

இளம் இயக்குனர், பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணையும் அருண்விஜய்

Wednesday, March 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன நடிகர் அருண்விஜய்க்கு, 'தடம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது அவருடைய சினிமா வாழ்வை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. சினிமா பின்புலம் இருந்தாலும் அருண்விஜய்யின் இந்த உயர்வுக்கு முழுக்க முழுக்க அவருடைய சொந்த முயற்சியே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரஜினி, கமல், விஜய், நயன்தாரா உள்பட முன்னணி நட்சத்திரங்களின் படங்களை தயாரித்த லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தில் அருண்விஜய் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே 'துருவங்கள் 16', 'நரகாசுரன்' போன்ற படங்களை இயக்கியவர் என்பது தெரிந்ததே!

இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் இந்த படம் அருண்விஜய், கார்த்திக் நரேன் இருவருக்குமே ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.