close
Choose your channels

மணிரத்னத்தை அடுத்து சிம்புவுடன் இணணயும் வெற்றிப்பட இயக்குனர்

Friday, December 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மல்டிஸ்டார் திரைப்படம் வரும் ஜனவரியில் தொடங்கவுள்ள நிலையில் இன்னொரு வெற்றி பட இயக்க்குனர் தான் இயக்கும் அடுத்த படத்தில் சிம்புவை இயக்குவார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த இயக்குனர் மோகன்ராஜா

ஆம், 'தனி ஒருவன்', 'வேலைக்காரன்' என சூப்பர் ஹிட் வெற்றிப்படங்களை இயக்கிய மோகன் ராஜா, அடுத்ததாக ரொமான்ஸ் மற்றும் மியூசிக்கல் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு சிம்பு பொருத்தமாக இருப்பார் என்று அவர் கருதியுள்ளதால் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தோல்வியால் சிம்புவின் மார்க்கெட் இறங்கியுள்ளதாக கூறப்பட்டாலும், அவர் முன்னணி இயக்குனர்கள் படத்தில் ஒப்பந்தமாகி வருவதால் வரும் 2018ஆம் ஆண்டு சிம்புவின் சிறந்த ஆண்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு இயக்கி நடித்து வரும் ஆங்கில படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.