பொருட்களின்மீது தங்கும் கொரோனா பல மணி நேரம் வாழும் தன்மையுடையதா???

  • IndiaGlitz, [Saturday,March 21 2020]


பிளாஸ்டிக் மற்றும் ஸ்டீல் பொருட்களின் மீது ஒரு நாளைக்கும் மேலாக கொரோனா வைரஸால் உயிர்வாழ முடியும். இத்தகவலை தற்போது NIH ஆய்வு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் National Istitutes of Health இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் ஒருவருக்கு தொடுவதால் மட்டும் அல்ல, அது காற்று, பொருட்களின் மீது பரவி வாழும் தன்மையுடையது. குறைந்த பட்சம், காற்றில் கலக்கும் கொரோனா வைரஸ்கள் (Droplets) 3 மணிநேரம் உயிர் வாழக்கூடியது. அதேபோல, பொருட்களின்மீது படரும் கொரோனா வைரஸ் ஒரு நாளைக்கும் மேலாக உயிர்வாழக் கூடிய தன்மையுடையது எனவும் தெரிய வந்திருக்கிறது.

மேலும், பிளாஸ்டிக், ஸ்டீல் பொருட்களின் மீது படரும் கொரோனா வைரஸ் அந்த பொருட்களில் குறைந்தபட்சம் ஒரு நாள் உயிர்வாழுகிறது. பித்தளை மற்றும் உலோகப் பொருட்களின் மீது 4 மணி நேரம்வரை வாழக்கூடிய தன்மையுடையது எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் பாதிக்கப் பட்டவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தால் பாதிப்புகள் இன்னும் தீவிரமாகும் என்ற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. கிருமிநாசினிப் பொருட்கைளைப் பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவும்போது இந்தப் பொருட்களின்மீது படந்திருக்கும் கொரோனா வைரஸ் கிருமிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
 

More News

விடுமுறைக்காக கொரோனா வதந்தி பரப்பிய இருவர் கைது: சென்னையில் பரபரப்பு

சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தாங்கள் பணிபுரியும் நிறுவனம் கொரோனாவுக்காக விடுமுறை அளிக்க வேண்டும் என்பதற்காக கொரோனாவால் 12 பேர் இறந்ததாக வதந்தி பரப்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மூடப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கள்: மீண்டும் அண்ணாச்சி கடைக்கு மாறும் பொதுமக்கள்! 

ஒரு காலத்தில் மளிகை பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் அனைவருக்கும் கை கொடுத்தது அண்ணாச்சி கடைதான். ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட் வந்தபின்னரும்,

நாளை டாஸ்மாக் மூடப்படும்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வரும் 22ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை ஏற்படுத்த வேண்டுமென சமீபத்தில் பிரதமர் மோடி அவர்கள், நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தன்னை திட்டியவர்களுக்கு நன்றி கூறிய பிரபல நடிகர்

சமீபத்தில் வெளியான 'வால்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்ற நட்ராஜ் சுப்பிரமணியம் பதிவு செய்த ஒரு டுவிட்டுக்கு நெட்டிசன்கள் திட்டி தீர்த்தனர்.

கொரோனாவை பரப்பிய பாடகி மீது வழக்கு: போலீஸார் அதிரடி

லக்னோவில் நேற்று ஒருநாள் மட்டும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது