கொரோனா எதிரொலி; இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டும் சீனா!!! 

  • IndiaGlitz, [Tuesday,March 24 2020]

 


கொரோனாவுக்கு எதிராகக் கடுமையான போராட்டத்தை நடத்தி வந்தபோது இந்தியா செய்த உதவிகளுக்கு சீனா, கடந்த திங்கட்கிழமையன்று நன்றி தெரிவித்தது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் 3277 உயிர்களை பலிக்கொடுத்த சீனாவில் தற்போது புதிய நோற்தொற்று எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. நோய் பரவலைத் தற்போது முழுவதும் அந்நாடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது. அரசின் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளால் 73,159 பேர் சிகிச்சை பெற்று நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்பியிருக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்து வந்த பாதையை குறித்த அனுபவத்தையும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் Geng Shuang இந்திய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மேலும், தேவையான மருத்துவ உதவிகளையும் இந்தியாவிற்கு செய்து கொடுக்க முன்வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இந்தியா, கொரோனா வைரஸ் அதிகம் தாக்கிய சீனாவின் வுஹான் மாகாணத்திற்கு கடந்த பிப்ரவரி 26 அன்று, இராணுவ விமானம் மூலம் முகமூடிகள், கையுறைகள் மற்றும் பிற அவசர மருத்துவ உபகரணங்கள் அடங்கிய சுமார் 15 டன் மருத்துவப் பொருட்களை அனுப்பி வைத்தது. அந்த மருத்துவப் பொருட்களுக்கு நன்றி தெரிவித்து சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் Geng Shuang தற்போது பேசியுள்ளார்.


கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள சீனா தற்போத 19 நாடுகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. இதில் இந்தியாவும் ஒன்று என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று பரவிய காலத்தில் சீனா கையாண்ட உக்திகளையும் இந்த 19 நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறது. தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவுகள், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு தற்போது சீனா உதவிக்கரம் நீட்டியிருக்கிறது.

சீன வெளியுறவுத் துறை அமைச்சர் Geng Shuang இந்த 19 நாடுகளுடனும் சீனாவின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள மிகப்பெரிய கருத்தரங்கு ஒன்றை நடத்தினார். அந்தக் கருத்தரங்கில் சீனாவுக்கும் இந்தியாவுக்கமான தொடர்பு வெளிப்படையாக இல்லாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, “தடையின்றி தகவல்களைப் பரிமாறிக் கொண்டுவருகிறோம்“ என Geng Shuang தெரிவித்து இருந்தார்.

மேலும், கொரோனா பரவலையடுத்து சீனாவுக்கும் இந்தியாவுக்குமான தொடர்பில் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்புகள் அதிகமாகி இருக்கிறது. முன்னதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனத் தரப்புக்கு அனுதாபக் கடித்தத்தை அனுப்பியிருந்தார். மேலும், இந்திய வெளியுறவு துறையமைச்சர் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.


சீன வெளியுறவுத் துறை அமைச்சர் Geng Shuang இந்தியா அளித்த மருத்துவப் பொருட்களுக்கு நன்றித் தெரிவித்துக் கொண்டதுடன் தற்போது இந்தியாவில் உள்ள நிலைமைக்கு உதவிசெய்ய தயாராக இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள சீனர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதத்தில் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் Geng Shuang நம்பிக்கை அளித்தார்.