காணாமல் போன ஐன்ஸ்டீனின் மூளை!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஐன்ஸ்டீனின் மூளை பல ஆண்டுகளாக காணாமல் போய்விட்டதாம், தெரியுமா?
ஐன்ஸ்டீனையும் அவர் ஒரு ஜீனியஸ் என்பதையும் அறியாதவர் ஒருவருமில்லை. விண்வெளி, காலம், புவியீர்ப்புவிசை, பிரபஞ்சம் என எல்லாவற்றையும் பற்றிய நமது விஞ்ஞான ரீதியான புரிதலை புரட்சிகரமாக மாற்றியமைத்தவர் அவர். ஆனால், 1955 ஆம் ஆண்டு அவர் இறந்த போது, அவரது மூளை மர்மமான முறையில் காணாமல் போய்விட்டது.
இது ஏதோ சயின்ஸ் ஃபிக்ஷன் படக் கதை போல இருக்கிறதா? ஆனால், சில விஞ்ஞானிகளுக்கு எப்போதுமே, மூளை எவ்வாறு செயல்படுகிறது அதுவும் , ஜீனியல் மூளைகள் எப்படி செயல்படுகின்றன என்று கண்டறிவதில் ஒரு மோசமான ஆர்வக் கோளாறு உண்டு என்று உங்களால் நம்பமுடியுமா?
நோயியல் நிபுணர் டாக்டர். தாமஸ் ஹார்வி என்பவருக்கு அந்த கோளாறு அதிகமாகவே இருந்திருக்கிறது.
பிரின்ஸ்டன் மருத்துவமனையில் ஐன்ஸ்டீனின் இறந்த உடலை பரிசோதித்த டாக்டர் ஹார்வி ,அவரது மூளையை வெளியே எடுத்து தமது ஆராய்ச்சிக்காக வீட்டுக்குக் கொண்டு செல்ல தீர்மானித்தார். அதை அவர் 240 துண்டுகளாக வெட்டி செலாய்டின் என்ற வேதிபொருள் நிரம்பிய ஜாடிகளில் பாதுகாத்து வந்தார்.
ஐன்ஸ்டீனின் அடக்க நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய அவரது மகன் ஹான்ஸ் ஆல்பர்ட் இந்த மூளைத் திருட்டைக் கண்டுபிடிக்கிறார். அந்த மூளையை ஹார்வி என்ன செய்தார் என்று அறிந்த போது கொதித்துப் போகிறார். ஆனாலும், அடுத்து சில பத்தாண்டுகளுக்கு அந்த மூளை ஹார்வியின் கையிலேயே தான் இருந்தது.
அதன் விளைவுகள்? ஹார்வி தமது வேலையை மட்டுமல்ல, திருமண வாழ்க்கையையும் இழந்தார். ஆனால், எந்த இழப்பும், அவரது ஆராய்ச்சியை தடை செய்ய முடியவில்லை. தம்மைப் போலவே ஆராய்ச்சி ஆர்வமிக்க தமது விஞ்ஞானி நண்பர்கள் பலரிடத்தில் அந்த மூளையின் பகுதிகளை அனுப்பி பாதுகாப்பாக மறைத்து வைத்தார்.
இன்று, ஐன்ஸ்டீனின் மூளையின் பகுதிகள் நியூ ஜெர்ஸியில் உள்ள பென் மெடிஸன் ப்ரின்ஸ்டன் மெடிக்கல் செண்டரில் உள்ளன. அவை இன்னுமே உலகம் முழுவதும் உள்ள பல விஞ்ஞானிகளின் ஆர்வத்தைத் தூண்டுவதாகவே உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com