அவர் படிச்சதே மோசடி செய்துதாங்க… அதிபர் மீது வைக்கப்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டு!!!

  • IndiaGlitz, [Tuesday,July 28 2020]

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் அண்ணன் மகளான மேரி ட்ரம்ப் அவரைப் பற்றி எதிர்மறையான கருத்துகளை கூறி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். 55 வயதான மேரி ட்ரம்ப் Trump and much never enough –How I family created the world most dangerous man என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்குத் தடைவிதிக்குமாறு வெள்ளை மாளிகை சார்பில் வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மக்கள் மத்தியில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் அப்புத்தகத்தில் கிளினிக்கல் சைக்காலஜி படித்த மேரி ட்ரம்ப் பல கடுயைமான கருத்துக்களைக் கூறியிருக்கிறார் என்பதுதான்.

அதில் “ட்ரம்ப் ஒரு சுயமோகி (Narcissist) எனக் கூறுவதற்குரிய அனைத்து பழக்க வழக்கங்களையும் கொண்டவர். அவர் மிகவும் பலவீனமானவர், ஒவ்வொரு சமயத்திலும் தன்னை பெரிதாகக் காட்டிக்கொள்ள அவருடைய ஈகோ அவரை உந்தித் தள்ளுகிறது. அவருடைய கையில் ஒவ்வொரு அமெரிக்க மக்களின் வாழ்க்கையும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது” என்பது போன்ற பல சர்ச்சையான கருத்துகளை குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு ட்ரம்ப் பல்கலை கழகத்தில் சேருவதற்காக ஆள்மாற்றம் செய்தார் என்றும் பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

நியூயார்க்கில் உள்ள Bronex பல்கலைக் கழகத்தில் ட்ரம்ப் இடத்தைப் பிடிப்பதற்காக அறிவாளியான இளைஞனை தேர்வு செய்து அவருக்கு பணம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். பின்னர் அவர் பென்சில்வேனியாவில் உள்ள மேலாண்மையியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார் என்றும் அந்தப் புத்தகத்தில் மேரி ட்ரம்ப் கூறியிருக்கிறார். ட்ரம்ப் எப்போதும் மென்மையாக இருந்ததே இல்லை. அதற்கு அவருடைய அப்பாதான் காரணம் என்றும் மேரி ட்ரம்ப் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்.

டெனால்ட் ட்ரம்ப்பின் தந்தை Frederick Trump மிகவும் கண்டிப்பான மனிதர். அவர் தனது பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொண்டாரோ அப்படித்தான் டெனால்ட் ட்ரம்ப் தற்போது நடந்து கொள்கிறார். இந்தக் கருத்தைக் கூறிய மேரி ட்ரம்ப் Frederick Trump யின் மூத்த மகன் Frederick Trump Junior இன் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலில் இவரே நிறுவனத்தின் நிர்வாகத்தை எடுத்து நடத்துவார் என எதிர்ப்பாத்த தந்தைக்கு ஜுனியர் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதற்கு அடுத்தாக உள்ள டெனால்ட் ட்ரம்ப்பின் தலையில் அனைத்துப் பொறுப்புகளும் விழுந்தன. இதனால் கண்டிப்புள்ள மனிதராக டொன்ல்ட் ட்ரம்ப் மாறிப்போனார் என்றும் மேரி கூறியிருக்கிறார்.

ஆனால் அத்தனை கருத்துகளுக்கும் வெள்ளை மாளிகை தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2016 இல் ட்ரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டத்தில் இருந்தே மேரி ட்ரம்ப் வெளியுலகில் பேசுவதை முற்றிலும் தவிர்த்து வந்திருக்கிறார். தற்போது அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு குறைவான நாட்களே இருக்கும் நிலையில் இப்படியான சர்ச்சை கருத்து வெளிப்படுத்தி இருப்பது குறித்து மக்கள் மத்தியில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுமோ எனவும் அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

More News

சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மூன்று மாதங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் ஓரளவுக்கு கொரோனா

காயத்ரி ரகுராம் மீது நடிகை விஜயலட்சுமி பகீர் குற்றச்சாட்டு!

விஜய், சூர்யா இணைந்து நடித்த 'பிரண்ட்ஸ்' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை விஜயலட்சுமி சமீபத்தில் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி தற்கொலைக்கு முயன்றார்.

புதிய சுற்றுச்சூழல் விதிகள் குறித்து நடிகர் கார்த்தியின் ஆக்கபூர்வமான பதிவு!

சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த புதிய சுற்றுச்சூழல் விதி குறித்து கடும் எதிர்ப்புகளை அரசியல் தலைவர்கள் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் உழவன் பவுண்டேஷன் வெளியிட்ட

நாம அடிமைகள்னு அவங்களே முடிவு பண்ணிக்கிட்டாங்களா: இயக்குனர் சேரன் ஆவேசம்

கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கனமழை பெய்து வருகிறது என்பதும், பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வீடுகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் வெள்ள நீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது

மேலும் ஒரு வருஷத்துக்கு வொர்க் பிஃரம் ஹோம்… முக்கிய நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!!!

கடந்த பிப்ரவரியில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்த நிலையில் கூகுள் நிறுவனம் அதன் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிசெய்யுமாறு அறிவிப்பு வெளியிட்டது.