திண்டுக்கல் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு! 3 ஆக அதிகரித்த எண்ணிக்கை!

  • IndiaGlitz, [Saturday,January 23 2021]

கடந்த 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறந்த அன்று பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து பள்ளி மாணவ மாணவிகளிடமும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அப்படி சேலம் மாவட்டம் தும்பல் அடுத்த கிருஷ்ணாபுரம் பள்ளியில் படித்து வரும் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரிடம் சேகரிப்பட்ட மாதிரியில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அந்தப் பள்ளி மூடப்பட்டதோடு அனைத்து மாணவர்களும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வேலைப் பார்த்த ஒரு ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அவர் பள்ளி திறந்த அன்று அனைத்து மாணவிகளுக்கும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை செய்தார் என்பதும் தெரியவந்தது. எனவே இந்தப் பள்ளியும் மூடப்பட்டது. அடுத்ததாக தமிழக அரசு இருமல், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்று அறிவுறித்தியது.

தற்போது திண்டுக்கல் மாவட்டம் சின்னகாந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு உள்ளது. பழனியில் இருந்து வரும் இவரின் கணவருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்தப் பள்ளியில் பணிபுரியும் 9 ஆசிரியர்கள், 20 பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆகியோருக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

More News

சிறுத்தையை அடித்து கறி விருந்து சாப்பிட்ட 5 பேர் கைது!

கேரளாவில் சிறுத்தையைப் பொறி வைத்து பிடித்து குழம்பு வைத்து சாப்பிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

எப்போதும் பாசிட்டிவ்வா இருப்போம் குமாரு: பிக்பாஸ் கேபியை ஆச்சரியப்படுத்திய நண்பர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியில் தேர்வு பெற்ற ஐவரில் ஒருவராக கேபி இருந்தார் என்பது தெரிந்ததே. இருப்பினும் பிக்பாஸ் கொடுத்த பணப் பெட்டியை

ரம்யாவை தூக்கி வைத்த கட்-அவுட்: ரியோவை வெட்கப்பட வைத்த நண்பர்கள்

பிக்பாஸ் இரண்டாவது ரன்னரான ரியோவை வரவேற்ற வீடியோ காட்சிகள் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது அவரது நண்பர்கள் ஒருசில பிளக்ஸ்போர்டு கட் அவுட்டுகளை

எந்தச் சூழ்நிலையிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்… முதல்வரின் அதிரடி பேச்சு!!!

மத்திய அரசு சட்டங்கள் குறித்து இஸ்லாமிய மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

வேற லெவல் குத்தாட்டம்: பிக்பாஸ் பாலாவின் வரவேற்பு வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெற்றது என்பதும் கடந்த ஞாயிறு அன்று இந்த நிகழ்ச்சியின் ஃபினாலே நடைபெற்றது என்பதும் இந்த ஃபினாலே நிகழ்ச்சியில் ஆரி வின்னராகவும், பாலாஜி ரன்னராகவும் தேர்வு பெற்றார்