வந்தால் ஐபிஎஸ் அதிகாரியாக வருவேன்: குஜராத் சிங்கப்பெண் சபதம்

  • IndiaGlitz, [Thursday,July 16 2020]

குஜராத் மாநிலத்தின் சுகாதார அமைச்சரின் மகனின் நண்பர்கள் சாலையில் ஊரடங்கு நேரத்தில் சுற்றி திரிந்ததை கண்டித்த பெண் போலீஸ் அதிகாரி சுனிதா இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறித்த செய்திகள் ஏற்கனவே வெளிவந்தது. இந்த நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் ‘வந்தால் அதிகாரம் மிக்க ஐபிஎஸ் அதிகாரியாக வருவேன் என்று சவால் விட்டு சுனிதா கொடுத்த பேட்டி தற்போது வைரலாகியுள்ளது

இந்த சம்பவம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுனிதா, ‘நான் பெண் சிங்கம் என்று எல்லோரும் கூறுகின்றனர். ஆனால் நான் உண்மையில் பெண் சிங்கம் இல்லை. ஒரு சாதாரண போலீஸ் அதிகாரி. நான் என்னுடைய கடமையைத்தான் செய்தேன். அனைத்து காவல் துறையினரும் இதேபோல் துணிந்து செய்ய மாட்டார்கள் என்று பொது மக்கள் கூறுகிறார்கள். அவ்வாறு அவர்கள் கூறும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது

காக்கி சட்டையில் பவர் இருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் அது இல்லை என்பதை புரிந்து கொண்டேன். அதற்காக நான் ஐபிஎஸ் அதிகாரியாக தயாராகி வருகிறேன். அதிகாரம் மிக்க பதவி தான் எனக்கு வேண்டும் என்று கூறினார்

மேலும் அமைச்சர் மகன் குறித்த பிரச்சனை குறித்து அவர் கூறியபோது ’மக்கள் நடமாட்டம் சரியான காரணங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அமைச்சர் மகனின் நண்பர்கள் எந்த காரணமும் இன்றி சுற்றித் திரிந்ததால் அவர்களை நான் தடுத்து நிறுத்தியதாகவும் கூறினார். மேலும் தற்போதைய சூழ்நிலையில் தான் மன உளைச்சலில் இருப்பதாக கூறிய சுனிதா, ‘ஐபிஎஸ் அதிகாரியாக தீவிர முயற்சி செய்வேன் என்றும் ஒருவேளை சிவில் சர்வீஸ் தேர்வில் தோல்வியடைந்தால் வழக்கறிஞர் அல்லது பத்திரிக்கையாளராக மாற முயற்சிப்பேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார். சிங்கப்பெண் சுனிதாவின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது

More News

9 மாத குழந்தை கொரோனாவுக்கு பலி! புதுவையில் அதிர்ச்சி

புதுவையில் 9 மாத குழந்தை ஒன்று கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

உலகிலேயே விலை மலிவான கொரோனா பரிசோதனை கருவி: இந்திய ஐஐடி நிறுவனத்தின் புதிய சாதனை!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனையும் அதிகரித்து இருப்பதாக மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

கந்த சஷ்டி கவசம் விவகாரம்: மேலும் ஒருவர் போலீசில் சரண் 

யூடியூப் சேனல் ஒன்று கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததால் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது

உங்க இஷ்டத்துக்கெல்லாம் ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடியாது!!! கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசு!!!

கொரோனா ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால் கல்வி துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது

கவுதம்மேனனின் அடுத்த படத்தில் வில்லனாகும் தமிழ் ஹீரோ!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இந்த கொரோனா விடுமுறையிலும் பிசியாக உள்ளார் என்பதும் அவரது 'கார்த்திக் டயல் செய்த எண்' மற்றும் 'ஒரு சான்ஸ் கொடு' ஆகிய குறும்படங்கள் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்ப்பை