கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க சில எளிய வழிமுறைகள்

 


கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்தியாவிலும் 41 பேருக்கு பரவி இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்திய சுகாதாரத் துறை பல விதிமுறைகளைக் கூறி இருக்கிறது. அந்த அடிப்படையில் கடைபிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள் குறித்த ஒரு தொகுப்பு.


கதவு கைபிடி, வாகனங்களின் கைபிடி, உணவகங்களில் மெனு கார்டு இவற்றை பயன்படுத்தும் போது சானிடைசரை கண்டிப்பாக உபயோகிக்க வேண்டும். பலரும் பயன்படுத்தும் வகையில் உள்ள பொது பொருட்களைத் தொடும் போதும் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.


பொதுக் கூட்டங்கள், போக்குவரத்து நெரிசல், ஆலய வழிபாடு போன்ற நேரங்களில் முகக் கவசங்களை அணிய வேண்டும். கூடுமான வரை மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களைத் தவிர்ப்பதே நல்லது என சுகாதாரத் துறை தெரிவித்து இருக்கிறது.


முகத்தை வெறும் கையால் தொடுவது, தேய்ப்பது, சொறிவது போன்ற செயல்களை முழுமையாக தவிர்க்க வேண்டும். கண், காது, மூக்கு போன்ற பகுதிகளில் கைகளைக் கொண்டு செல்வதை அறவே தவிர்க்க வேண்டும். வெட் வைப்ஸ், கிருமி நாசினி டிஷ்யூக்களைக் கொண்டு முகத்தைச் சுத்தம் செய்யலாம்.


அடிக்கடி கைகளை கழுவுதல்
கொரோனா அடிப்படையில் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் தன்மை உடையது. மேலும், சளி, காய்ச்சல் போன்றவை கொரோனா நோய்த் தொற்றின் அறிகுறிகள் என்பதால் சளி, காய்ச்சல் இருக்கும் நபர்களை விட்டு தள்ளி இருப்பதே நலம். கொரோனா தொற்று ஒருவரின் உடலில் தோன்றி குறைந்தது 14 நாட்கள் வரையில் இருக்கும் என்பதால் கொரோனா அறிகுறி இருக்கும் மனிதர்களை விட்டு தள்ளியே இருக்க வேண்டும்.


கைகளைச் சுத்தமாக வைத்துக் கொண்டாலே கொரோனா பரவலை கூடுமான வரையில் தடுக்க முடியும். எனவே கைகளை கிருமிநாசினி மருந்துகள் உள்ள சோப் மற்றும் திரவப் பொருட்களைக் கொண்டு அடிக்கடி கழுவ வேண்டும். சாப்பிடும் போதும், கழிவறைகளைப் பயன்படுத்தும் போதும் ஒவ்வொரு வேலைகளுக்கு நடுவிலும் இப்படி கைகளைக் கழுவுவதன் மூலம் கூடுமான வரையில் நோய் தொற்றினை தடுக்க முடியும்.


வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வீடுகள் மற்றும் அதிக நபர்கள் கூடும் இடங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யலாம். சளி, காய்ச்சல் இருக்கும் போது அதன் தீவிரத் தன்மை குறித்து மருத்துவரிடம் ஆலோசனையை பெற்று கொள்வது மிகவும் நல்லது.


நாம் அன்றாட வாழ்க்கையில் பல பொருட்களைத் தொடுகிறோம். கதவின் கைபிடி முதற்கொண்டு, செல்போன், கம்பியூட்டர் இப்படி எத்தனையோ பொருட்களை நொடிப்பொழுதில் தொட்டு விட்டு நமது அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுகிறோம். நடுவில் மூக்கை தொடுவது, காதை சொறிவது போன்ற எந்த வேலைகளையும் செய்யக் கூடாது.


சளி, காய்ச்சல்
சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதைத் தவிர்க்குமாறு தமிழகப் பள்ளிக் கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்லாமல் இள வயது, முதியவர்கள் வரை கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கொரோனா சளி, காய்ச்சல் அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் கூடுமான வரை சளி, காய்ச்சல் இருக்கும் நபர்களை விட்டு தள்ளியே இருக்க வேண்டும்.


பயோமெட்ரிக்
கொரோனா பரவலைத் தடுக்க பல நிறுவனங்களில் பயோமெட்ரிக் தவிர்க்கப் பட்டு வருகிறது. தமிழகத்தின் பள்ளி கல்வி துறையும் இது போன்ற அறிவிப்பினை வெளியிட்டு இருக்கும் நிலையில் பயோமெர்ட்ரிக் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். இது குறித்து ஒவ்வொரு நிர்வாகத்திடமும் ஊழியர்கள் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.

பணப் பரிமாற்றம்
பணம் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரிமாறிக் கொள்ளப் படுவதால் கொரோனா வருமா? என்ற அச்சமும் மக்களிடம் இருந்து வருகிறது. இது குறித்த தெளிவினை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. பண பரிமாற்றத்தின்போது டாலர்கள் மற்றும் பண நோட்டுகளில் பாக்டீரியா, பங்கஸ், பாரசைட் இருப்பது முன்னரே பல்வேறு சோதனைகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.


தற்போது கொரோனா அச்சத்தால் அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி ஆசியாவில் இருந்து பெறப்பட்ட டாலர் நோட்டுகளை தனியாக வைத்து அவற்றை சோதித்தப் பின்னரே மறு சுழற்சிக்கு அனுப்புவதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த 2014 இல் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப் பட்ட சோதனையில் டாலர் நோட்டுகளில் 3 ஆயிரம் பாக்டீரியாக்கள் இருந்தது சோதனையில் தெரிய வந்தது.


எனவே முடிந்த வரை ஆன்லைன் பணப் பரிமாற்றதை மேற்கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது. பழைய கிழிந்த ரூபாய் நோட்டுக்களையோ அல்லது நோய் தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப் படும் நபர்களிடம் இருந்து வாங்கப் பட்ட நோட்டுக்களையோ தொடக் கூடாது. பணத்தைத் தொட்ட கையால் மீண்டும் முகத்தைத் தொடக் கூடாது. மேலும், சிறியப் பொருட்களைத் தொடும்போதும் அதீதக் கவனத்துடன் இருக்குமாறு WHO கேட்டுக் கொண்டிருக்கிறது.
 

More News

கொரோனா பாதிப்பு எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் திருவிழா இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்க உள்ளது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் முதல் போட்டியாக சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி

கமல், ரஜினி பட நடிகை வீட்டில் நகைகள் திருட்டு: 2 பேர் கைது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'முத்து', உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'மைக்கேல் மதன காமராஜன்', ரஜினி கமல் இருவரும் இணைந்து நடித்த

கொரோனா எதிரொலி.. இல்லாத ரசிகர்களுக்கு தனியாய் கையசைத்த ரொனால்டோ...! நெகிழ்ச்சி வீடியோ.

யாருமே வரவில்லை என்றாலும் கிரிஷ்டியானோ ரொனால்டோ தான் ரசிகர்கள் இருக்கும் பொது வழக்கமாக செய்யும் கையசைப்புக்களை தனியாக செய்து கொண்டிருந்தார்.

ஹோலி கொண்டாடிய காதல் பறவைகள் பிரியங்கா சோப்ரா: நிக் ஜோனஸ் -  டிவிட்டரில் கலக்கிய புகைப்படங்கள்

கடந்த 2018 இல் காதல் திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் ஜோடி தனது முதல் ஹோலி பண்டிகையை கொண்டாடி இருக்கிறது

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த பட டீஸர்: இணையத்தில் வைரல் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு