கொரோனவை குணப்படுத்தும் Cuban Interferon Alpha 2B மருந்து எப்படி செயல்படுகிறது??? பின்னணி என்ன???

  • IndiaGlitz, [Monday,March 23 2020]


சீனாவில் கோரோனா வைரஸ் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது. அந்நாட்டு மருத்துப் பணியாளர்கள், அரசு போன்றோர்களின் தீவிர உழைப்பினால் இது சாத்தியமாகி இருக்கிறது. இதற்கு சீன அரசு மேற்கொண்ட கட்டுப்பாடுகள் மற்றும் மருந்துகளும் முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

சீனா, கொரோனாவிற்கு பரிந்துரைத்த 30 மருத்துவப் பொருட்களில் கடைசியாக Cuban Interferon Alpha 2B ம் ஒன்று என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த Alpha 2B ஐப் பற்றித்தான் தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்த மருந்து கொரோனா போன்ற வைரஸ்களை தாக்கி அழிக்கக் கூடிய திறன்கொண்டது ஆகும். வைரஸ்கள் உடலில் பரவியிருக்கும்போது அது ஏற்படுத்தும் நோய்த்தாக்குதலில் இருந்து காப்பாற்றும் வேலையை இந்த Interferon செய்வதாக கியூப விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

முதலில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவே இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 1981 இல் ஏற்பட்ட டெங்கு காய்ச்சலை கியூபா இந்த மருந்தைப் பயன்படுத்தித்தான் முழுமையாகக் கட்டுப்படுத்தியது. Interferon நச்சுத்தன்மைக் கொண்ட வைரஸ் புரதங்களை மட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. எனவே மனித உடலில் பரவிய வைரஸ் கிருமிகள் ஒரு செல்லில் இருந்து மற்ற செல்களுக்குப் பரவாமல் தடுக்க இந்த மருந்து பயன்படும்.

டெங்கு, எய்ட்ஸ், புற்றுநோய் முதற்கொண்டு தற்போது கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கும் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது. கியூபா சுமார் 40 ஆண்டுகளாக Cuban Interferon Alpha 2B மருந்தைப் பயன்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போது கொரோனா பாதிப்புகளுக்கு ஒரு வெற்றிகரமான மருந்தாக உலகம் முழுவதும் பார்க்கப் படுகிறது.

இந்த மருந்தை உருவாக்கிய கியூப மருத்துவர் Luis Herrera “மனித ஆரோக்கியம் ஒரு வணிகச் சொத்து அல்ல, அடிப்படை உரிமை என்பதை உலகம் புரிந்து கொள்ள தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது” எனத் தெரிவித்து இருக்கிறார். இந்த மருந்தின் மரபணு தொடரைப் பயன்படுத்தி பல நாடுகள் தடுப்பு பொருளை உருவாக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். முதலாவதாக ஜப்பான் Beta Interferon என்றும் அடுத்து கலிபோர்னியா Alpha Interferon என்றும் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்தனர்.

கியூபாவில் 1981 ஆம் ஆண்டுகளில் தான் இந்த மருந்து தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மனித உயிர்களில் வைரஸ் புரதத்தை உற்பத்தி செய்யும் Interferon அளவை குறைப்பதன் மூலம் செல்களில் பெருகக்கூடிய வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப் படுகிறது. இதனால் ஒரு செல் வைரஸ், மற்ற செல்களுக்குப் பரவாமல் தடுக்கப் படுகிறது. கொரோனா குடும்பத்தின் MERS-CoV தொற்று பரவியபோது வைரஸ் தொற்று செல்களில் அதிக அளவு பரவாமல் தடுக்க Cuban Interferon Alpha 2B பயன்படுத்தப் பட்டது. இதில் வெற்றியும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

சீனாவில் கொரோனா பரவத்தொடங்கிய சில வாரங்களுக்கு பின்பு இந்த மருந்தை சீன மருத்துவர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். குறைந்த அளவிலான பக்க விளைவுகளைக் கொண்டது என்றாலும் மிகவும் சிக்கலான மருந்து இல்லை எனவும் Luis Herrera தெரிவித்து இருக்கிறார்.

இளைஞர்கள் மற்றும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்களுக்கு இந்த மருந்து தேவைப்படாது. ஆனால் முதியவர்கள், குழந்தைகளின் நோய் தொற்றுக்கு இது ஒரு சிறந்த வழிமுறையாக அமையும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், Luis Herrera கூறும்போது மற்ற நாடுகளும் இந்த மருந்து பொருளின் பயன்பாட்டில் இணைய வேண்டும். உலகின் வேறெந்த நாட்டையும் விட கியூப மருத்துவர்கள் அதிகமாக வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். ஆனால் நாங்கள் இந்த மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதைவிட சிறந்த வாழ்வியல் கொண்ட உலகைக் கட்டியெழுப்பவே பயன்படுத்துகிறோம் எனத் தெரிவித்தார்.
 

More News

கொரனா பாடல் மூலம் மீண்டும் இணைந்த இசைக்கலைஞர்கள்

உலகம் முழுவதும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்த விழிப்புணர்வை திரையுலகை சேர்ந்த பலர் ஏற்படுத்தி வரும் நிலையில்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்த பயணிகள் பலருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்

இந்தியா முழுவதும் 80 மாவட்டங்கள் 31 ஆம்தேதி வரை முடக்கப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நேற்று ஒருநாள் மட்டும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.  அதேபோல

மருத்துவர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவித்த விக்கி-நயன் ஜோடி!

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் இந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்வு

கொரோனாவால் தமிழகத்தில் 9 பேர் இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்பது பேர்களும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்