close
Choose your channels

"நானும் பிராமணனே"....! நேரலையில் சர்ச்சையை கிளப்பிய பிரபல கிரிக்கெட்டரின் பேச்சு....!

Tuesday, July 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேரலையில் பேசும் போது, "நானும் பிராமணன் தான்" என்று சுரேஷ் ரெய்னா கூறியிருப்பது, இணையத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ரெய்னாவின் பேச்சிற்கு இணையவாசிகள் பலரும், கடுமையான விமர்சனங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த திங்களன்று கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையே, துவக்க ஆட்டம் நடைபெற்றது. அப்போது வருணனையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா சேர்க்கப்பட்டார். இவர் இந்திய ப்ரீமியர் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய அங்கம் வகிக்கிறார் என்பது நமக்கு தெரிந்த ஒன்றே.

போட்டியின் வருணனையாளர், தென்னிந்திய கலாச்சாரத்தை எப்படி பின்பற்றுகிறீர்கள்..? நடனமாடுவது, வேஷ்டி கட்டுவது, விசில் அடிப்பது உள்ளிட்ட கலாச்சாரங்களை பின்பற்றுவதால் கேட்கிறேன், என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த ரெய்னா " நானும் பிராமணன் தான், கடந்த 2004-ஆம் ஆண்டில் இருந்து விளையாடுகிறேன். இந்த கலாச்சாரம் மற்றும் என்னுடன் விளையாடும் சக வீரர்களையும் நான் நேசிக்கின்றேன். நான் இங்கிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அனிருதா ஸ்ரீகாந்த், பத்ரி, பாலா பாய் (எல். பாலாஜி) போன்ற வீரர்களுடன் விளையாடியுள்ளேன். இங்கு சிறந்த நிர்வாகமும், நம்மை பரிசோதித்து கொள்ளும் உரிமையும் உள்ளதால், சென்னை கலாச்சாரம் பிடித்திருக்கிறது" என்று கூறியிருந்தார்.

இந்தநிலையில் ரெய்னா பிராமணன் என்று தன்னை அடையாளப்படுத்தி பேசியதற்கு, சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த சர்ச்சையான பதில்தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது, பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். "ரெய்னா இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும், சென்னை அணிக்காக அவர் கிரிக்கெட் விளையாடியிருக்கலாம், ஆனால் உண்மையான சென்னை கலாச்சாரத்தை அவர் அனுபவித்து இருக்க மாட்டார்" என பலரும் கூறி வருகின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில், முராத்நகரில் பிறந்தவர் ரெய்னா. கடந்த 2002 ஆண்டுமுதல் உள்ளூர் கிரிக்கெட்டுகளில் விளையாடி வந்தார். இதன்பின் 2005-இல் முதல் தேசிய மற்றும் சர்வதேச ஆட்டங்களில் விளையாட ஆரம்பித்தார். தன்னுடைய 19 வயதிலே, இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தடம் பதித்தார். இதையடுத்து 2010-இல் ஜூலையில் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்தார். 2011-இல் உலககோப்பையை இந்திய அணி வென்றது, அதில் ரெய்னாவிற்கும் முக்கிய பங்குண்டு. இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டனாகவும் வலம் வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இனி விளையாடப்போவதில்லை என கடந்த ஆண்டு ஆகஸ்டில், சுரேஷ் ரெய்னா அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.