சென்னையில் நடந்த கின்னஸ் சாதனை முயற்சியில் நடிகர் நகுல் மனைவி

  • IndiaGlitz, [Saturday,January 12 2019]

சென்னை ஐஐடி வளாகத்தில் கின்னஸ் சாதனைக்காக 100 அடியில் முறுகலான கமகம நெய் தோசை சுடப்பட்டது.

சென்னை ஐஐடி வளாகத்தில் சரவணபவன் ஓட்டல் சமையல் கலைஞர்கள் 50 பேர் இணைந்து, 100 அடி நீள தோசை ஒன்றை சுட்டுள்ளார்கள். இந்த பிரமாண்ட தோசை பிரபல செஃப் வினோத் என்பவரின் தலைமையில் சுடப்பட்டது. நடிகர் நகுல் மனைவி சுருதி, விஜய் டிவி மாகாபா ஆனந்த், போன்றோர் இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் கலந்து கொண்டனர்.

இந்த சாதனைக்காக இன்ஜினியரிங் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று பெரிய தோசை கல் தயார் செய்யப்பட்டது. இந்த கல் 180-200 டிகிரியில் ஒரே சீரான வெப்பத்தில்தான் இருக்க வேண்டும் என்றும் சமையல் கலைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

20 கிலோ மாவில் சுமார் 50 பேர் இணைந்து சுட்ட இந்த தோசை விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஐதராபாத்தில், 54 அடி 8.65 இஞ்ச் நீள தோசைதான் கின்னஸ் சாதனையாக இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கீர்த்திசுரேஷின் 20வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

கடந்த 2015ஆம் ஆண்டு விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் மூன்றே ஆடுகளில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில்

'கழுகு 2' சென்சார் மற்றும் ஃபர்ஸ்ட்சிங்கிள் குறித்த தகவல்

கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த 'கழுகு' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 'கழுகு 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

சென்னை தியேட்டரில் 'பேட்ட' படம் பார்த்த கலாநிதி மாறன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

அடிச்சி தூக்கியிருக்காங்க: நயன்தாராவை பாராட்டிய விக்னேஷ்சிவன்

தல அஜித், நயன்தாரா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவான 'விஸ்வாசம்' திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை பெற்று வரும் நிலையில்

கொரிய படத்தின் ரீமேக் படத்தில் சமந்தா!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் சமந்தா கடந்த ஆண்டு 'ரங்கஸ்தலம்,