close
Choose your channels

'விஸ்வாசம்' படத்தை பார்த்து கொண்டிருந்த ரசிகர் திடீரென பலியான சோகம்

Thursday, January 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி ரஜினியின் 'பேட்ட' படத்துடன் ரிலீஸ் ஆனாலும் முதல் நாளில் இருந்து இன்று வரை வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுவை தியேட்டர் ஒன்றில் 'விஸ்வாசம்' படம் பார்த்த ரசிகர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து பலியானார். கோவையை சேர்ந்த ராம்குமார் என்ற அஜித் ரசிகர் புதுவை தியேட்டர் ஒன்றில் 'விஸ்வாசம்' படத்தை தனது நண்பர்களுடன் பார்த்து கொண்டிருந்தார். படத்தின் இடைவேளை வரை ஒவ்வொரு காட்சிகளையும் விசிலடித்து ரசித்து பார்த்து கொண்டிருந்த ராம்குமார் திடீரென மயங்கி விழுந்தார்.

ராம்குமார் போதையில்தான் மயங்கிவிட்டதாக நினைத்து அவரது நண்பர்களும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் படம் முடிந்தும் அவர் எழுந்திருக்காததால் பதட்டம் அடைந்த அவரது நண்பர்கள் ராம்குமாரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ராம்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நண்பர்களுடன் சந்தோஷமாக படம் பார்க்க சென்ற ராம்குமார் வீட்டிற்கு பிணமாக திரும்பியது அவரது உறவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.