கொரோனா சிகிச்சைக்கு மட்டுமல்லாது பரவலைத் தடுக்கவும் இன்டர்ஃபிரான் a2b பயன்படும்!!!

கொரோனா சிகிச்சைக்கு குறிப்பிட்ட மருந்து எதையும் பரிந்துரைக்காத நிலையில் உலக நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் Remdesivir போன்ற மருந்துகளை பயன்படுத்தி வருகின்றன. கியூபாவின் மருந்தான இன்டர்ஃபிரான் a2b பல நோய்த்தொற்றுக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்டு வருவதாகக் கூறப்பட்டாலும் இது பற்றிய தெளிவாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கொரோன சிகிச்சைக்கு கியூபா, இந்த மருந்துகளை குறிப்பிடத்தக்க அளவில் மற்ற நாடுகளுக்கு அனுப்பி வைத்தது என்ற செய்தி மட்டும் வெளியானது. ஆனால் கொரோனா நோய்க்கு எதிராக இது எப்படி வேலை செய்கிறது என்ற தகவல் வெளியிடப் படவில்லை.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு மட்டுமல்லாது கொரோனா பரவலை கணிசமாகக் குறைப்பதற்கும் இந்த மருந்து பெரிதும் பயன்படுகிறது என Frontiers in Immunology மருத்துவ ஆய்விதழ் கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக சிகிச்சை அளிப்பதில் இன்டர்ஃபிரான் a2b பெரிதும் பயன்பட்டு வருவதாகவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸை உடலுக்குள் அனுமதிக்காமல் கணிசமாக குறைப்பதற்கு இந்த மருந்து சிறந்த உக்தியாகப் பயன்படும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனித உடலில் உள்ள செல்களுக்கும் திசுக்களுக்கு சிறந்த தகவல் தொடர்பு சாதனமாக இந்த மருந்து செயல்படுகிறது. நோய்ப் பரவலின் ஆரம்பக் கட்டத்திலேயே இந்த மருந்து உடலிலுள்ள செல்களுக்கு கடுமையான எச்சரிக்கையை அனுப்புகிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் விரைந்து வேலை செய்ய இது பெரிதும் துணை புரிவதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கொரோன நோயாளிகளில் பலரும் சைட்டோகைன் வீக்கத்தினால் உயிரிழக்கும் அபாயமும் நேருகிறது. இந்த நோய் எதிர்ப்பு புரதங்கள் ஏற்படுத்தும் நுரையீரல் வீக்கத்தை குறைப்பதற்கும் இந்த மருந்து சிறப்பாக செயலாற்றுகிறது. மேலும், வலுவிழந்த நோய் எதிர்ப்பு மண்டலத்தை வீரியம் மிக்கதாக மாற்றுவதில் இந்த மருந்து சிறந்த பணியை செய்கிறது. சீனாவில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 77 கொரோனா நோயாளிகளில் பலருக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக இருந்தது என்றும் அந்த நோயாளிகளின் சிகிச்சைக்கு இன்டர்ஃபிரான் a2b கொடுக்கப்பட்டதால் நல்ல முறையில் குணமடைந்தனர் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கனடாவின் டெராண்டா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் “பெருந்தொற்று காலங்களில் நோய்த் தொற்றுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்கு பதிலாக இந்த மருந்தை உபயோகப்படுத்தலாம். இந்த மருந்து தொற்றை குறைக்க உதவும். உடலுக்குள் பரவிய நோய்க் கிருமிகளை தடுத்து நிறுத்தவும் சிறந்த வழிமுறையாக இருக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானி எலினோ ஃபிஷ் இன்டர்ஃபிரான் a2b மருந்தானது பல நோய்களுக்கு எதிராக இதுவரை பயன்படுத்தப் பட்டு வருகிறது. எனவே ஒவ்வொரு தொற்று நோய் காலங்களிலும் இந்த மருந்தை மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் எனக் கூறியுள்ளார். இன்டர்ஃபிரான் a2b என்பது நோய்க்கு எதிரான மனித நோய் எதிர்ப்பு மண்டலம் வெளிப்படுத்தும் புரதங்களின் தொகுப்பு ஆகும். Inter leukin (IL) 6 மற்றும் C Reactive Portein (CRP) என்பது ஆகும்.
 

More News

ராகவா லாரன்ஸ் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய குஜராத் முதல்வர்

இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் கோடிக்கணக்கில் நிதியுதவி மட்டுமின்றி லட்சக்கணக்கானோர் பசியையும் தனது தாய் அறக்கட்டளை மூலம் போக்கி வரும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் என்பது தெரிந்ததே.

கொரோனா பாதிப்பு 477 பேர்கள், குணமானோர் 939 பேர்கள்: தமிழகத்தில் பாசிட்டிவ் அறிகுறி

தமிழகத்தில் கடந்த வாரம் வரை கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக இருந்த நிலையில் ஓரிரு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

மாளவிகா மோகனனிடம் இத்தனை திறமையா? ஒரு ஆச்சரிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்த மாளவிகா மோகனன், விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் நாயகியாக நடித்தவுடன் அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே பிரபலமானார்.

உங்கம்மாவ என்ன சொல்லி தேத்துறது: பிரபல இயக்குனர் உருக்கம்

ஜிவி பிரகாஷ் நடித்த '4ஜி' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் அருண் பிரசாத் என்பவர் நேற்று சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார்.

கொரோனாவுக்கு Remdesivir சிகிச்சை: மருத்துவமனையில் தங்கும் நாட்களை 31% ஆக குறைந்துள்ளது!!!

கொரோனா சிகிச்சையில் Remdesivir மருந்து பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.