40 ஆயிரம் அடி உயரத்தில் பிரியாணியும் நாட்டுக்கோழியும்.. நயன்தாராவின் வைரல் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


40,000 அடி உயரத்தில் விமானத்தில் பறக்கும் போது, பிரியாணியும் நாட்டு கோழியையும் சாப்பிட தயாராகும் வீடியோவை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை நயன்தாரா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலா செல்வதற்காக விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
40,000 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, “பிரியாணி மற்றும் நாட்டு கோழியை வீட்டில் இருந்து எடுத்து வந்து சாப்பிட தயாராகி உள்ளோம்,” என கேப்ஷன் அதில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவில், நயன்தாரா தனது மகனின் கையை பிடித்துக் கொண்டிருக்கும் காட்சியும், டைனிங் டேபிள் மீது உணவுகள் தயாராக வைக்கப்பட்டிருக்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவுக்கு லைக், கமெண்ட் என பலரும் உற்சாகமாக பதிலளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை நயன்தாரா சிரஞ்சீவியுடன் அவரது 157வது படத்தில் நடிக்கவிருக்கிறார். "யாஷ் நடிக்கும் டாக்சிக்", "மண்ணாங்கட்டி சிங் 1960", "டியர் ஸ்டூடண்ட்ஸ்", "மூக்குத்தி அம்மன் 2", "ராக்காயி" என ஒரே நேரத்தில் எட்டு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பதும், அவை அடுத்தடுத்து வெளியாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Vacay time ✈️ #WikkiNayan pic.twitter.com/LtV8dy8jOq
— Nayanthara✨ (@NayantharaU) May 19, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com