close
Choose your channels

இன்று நள்ளிரவு 12 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

Tuesday, December 12, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான 'காலா' படத்தின் செக்ண்டலுக் வெளியாகவுள்ளது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ஏற்கனவே வெளிவந்து பட்டையை கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செக்ண்ட் லுக் போஸ்டரை ரஜினியின் மருமகனும், பிரபல நடிகரும், 'காலா' படத்தின் தயாரிப்பாளருமாகிய தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்

'காலா' படத்தின் செகண்ட்லுக் வெளியாகவுள்ளதாக வெளிவந்த தகவல் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருவதோடு டுவிட்டரில் 'காலா' என்னும் ஹேஷ்டேக் ஒருசில நிமிடங்களில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.