close
Choose your channels

அமலாபாலை அடுத்து நிர்வாணமாக நடிக்கும் தேசிய விருது பெற்ற நடிகை

Monday, October 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலாபால் ஆடை இல்லாமல் நடித்த 'ஆடை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் என்பவர் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து இந்த படத்தில் அமலாபால் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகையும் தேசிய விருது பெற்றவருமான கங்கனா ரனாவத் நடிக்க வாய்ப்பு இருப்பதாக உறுதிப்படுத்தாத செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் அமலாபால் போல் ஆடையின்றி கங்கனாவும் இந்த படத்தில் போல்டாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

'ஆடை' இந்தி ரீமேக் திரைப்படத்தை தமிழில் இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்க உள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இயக்குனர் ரத்னகுமார் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.