மருத்துவமனையில் கபில்தேவ்: வைரலாகும் புகைப்படம்

  • IndiaGlitz, [Saturday,October 24 2020]

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்தியாவுக்காக முதன்முதலில் உலக கோப்பையை பெற்று தந்தவருமான கபில்தேவ் நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான மாரடைப்பு இருந்ததாகவும் இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கபில்தேவ் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் விரைவில் முழுமையாக குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் கபில்தேவ் உடன் விளையாடிய பிரபல கிரிக்கெட் வீரர் சேட்டன் சர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் மருத்துவமனையில் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து அவர் நலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் இரண்டு கைகளையும் தூக்கி ஒற்றை விரலை காட்டும் கபில்தேவ் அருகில் அவரது மகள் உள்ளார் என்பதும், இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கபில்தேவுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடிந்து நலமுடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால் கோடிக்கணக்கான ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் கபில்தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் நலமுடன் இருப்பதாகவும் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நலம் என்றும் தெரிவித்துள்ளார்

More News

கவர்ச்சியில் அக்காவை மிஞ்சுகிறாரா? யாஷிகா தங்கையின் ஹாட் புகைப்படங்கள்!

'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் யாஷிகா ஆனந்த்.

கொரியா நாடுகளை சுற்றித் திரியும் மஞ்சள் தூசு படலம்… கொரோனா பாதிப்புக்கு அறிகுறியா???

ஒவ்வொரு ஆண்டும் மங்கோலியா மற்றும் சீனாவின் பல பாலைவனப் பகுதிகளில் இருந்து மணல் தூசுகள் அடங்கிய மஞ்சள் தூசு படலங்கள் கொரிய நாடுகளை நோக்கி படையெடுக்கிறது.

தொடரும் அர்ச்சனாவின் நாட்டாமைத்தனம், சீண்டும் பாலாஜி: பிக்பாஸ் பரபரப்புகள்!

பிக்பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த போது பிக்பாஸ் வீடே கலகலப்பாக மாறியது உண்மைதான். ஆனால் ஓரிரண்டு நாட்களில் அர்ச்சனா தானும் 16 போட்டியாளர்களில் ஒருவர்

சிஎஸ்கே ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் நயன்தாரா! ஆச்சரிய தகவல்

நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமீபத்தில்

முகக்கவசம் அணிந்து ஒய்யாரமாக வாக்கிங்… வைரலாகும் செல்லப்பிராணியின் வீடியோ!!!

அயர்லாந்து நாட்டில் முகக்கவசம் அணிந்து கொண்டு ஒரு நாய்க்குட்டி தனது எஜமானியுடன் ஒய்யாரமாக வாக்கிங் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது