தமிழகப் பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பிரதமர் மோடி எழுப்பிய முக்கிய கேள்வி?

  • IndiaGlitz, [Friday,September 04 2020]

 

தமிழகத்தைச் சார்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் ஒரு முக்கியக் கேள்வியை எழுப்பி இருக்கிறார். அதில் இன்ஜினியரிங் படித்துவிட்டு காவல் அதிகாரியாக மாற ஏன் முடிவு எடுத்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது ஐத்ராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்த வகுப்பில் தமிழகத்தைச் சார்ந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் ஸ்ருதியும் இடம் பெற்றிருக்கிறார். இந்நிலையில் பயிற்சி பெற்றுவரும் இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பிரதமர் காணொலி வாயிலாக பேசினார். அப்போது தமிழகத்தைச் சார்ந்த ஐபிஎஸ் அதிகாரியாக பயிற்சி பெறும் கிரண் ஸ்ருதியிடம் பிரதமர் இன்ஜினியரிங் படித்து விட்டு ஏன் ஐபிஎஸ் வேலையைத் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்டிருக்கிறார்.

பிரதமரின் கேள்விக்கு பதில் அளித்த கிரஸ் ஸ்ருதி சீருடை அணிந்து மக்களுக்கு சேவையாற்ற பெற்றோர் விரும்பியதால் ஐபிஎஸ் அதிகாரியாக விரும்பினேன் எனக்கூறி பெருமைப்பட்டு இருக்கிறார். மேலும் இந்தியாவின் முதல் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடியைப் போலவே வரவேண்டும் என்று தன்னுடைய பெற்றோர்கள் இந்த பெயரை வைத்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.

அவரது பதிலுக்கு பாராட்டுத் தெரிவித்த மோடி இளம் ஐபிஎஸ் வீரர்கள் பதட்டம் அடையாமல் தங்களது பணியைத் தொடர யோகா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள அதிகாரிகள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். உங்கள் சீருடையால் நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். மரியாதையை ஒருபோதும் இழக்காதீர்கள் எனவும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

More News

மாதிரி சவப்பெட்டியில் அடைத்து தண்டனை… இத்தனை கொடூரம் எதற்கு தெரியுமா?

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்றவை மட்டுமே இதுவரை தீர்வாகக் கருதப்பட்டு வருகிறது.

பப்ஜி கேமுக்கு பதில் புதிய கேம்: தொடங்குகிறார் 'ரஜினி-ஷங்கர்' பட நடிகர்!

இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே கடந்த ஜூன் மாதம் லடாக் பகுதியில் நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது தெரிந்ததே.

நவம்பரில் ரஜினிகாந்த்? ராகவா லாரன்ஸ் சொல்ல வருவது என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் நவம்பரில் அரசியல் கட்சியை தொடங்குவார் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்ததை ஏற்கனவே பார்த்தோம்.

வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்: ஆசிட் வீசி பழிதீர்த்த இளம்பெண்

மூன்று ஆண்டுகளாக காதலித்த காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இளம்பெண் தனது காதலர் மீது ஆசிட் வீசிய சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு: கட்-அவுட், போஸ்டர் எல்லாம் வேஸ்ட்டா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் சமீபத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு