கொரோனா அச்சம்.. ஒரு ஊரே வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கும் அவலம்..!

  • IndiaGlitz, [Wednesday,March 04 2020]

ஹைதராபாத்தில் உள்ள மகேந்திர மலைகளும் அதை சுற்றியிருக்கும் ஊர்களில் உள்ள குடியிருப்புகளில் வாழும் மக்கள் கொரோனா அச்சம் காரணமாக வீட்டை விட்டு கூட வெளியே வராமல் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பகுதியில் வாழ்ந்து வந்த 24 வயது இளைஞர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் வைரஸ் தங்களுக்கும் வந்துவிடுமோ எனும் அச்சத்தில் அங்கு வசிக்கும் பிற மக்கள் வீடுகளை விட்டே வெளியே வராமல் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள தெருக்கள் வீடுகள் எல்லாம் மிக அமைதியாக எதோ கைவிடப்பட்ட நகரம் போல் காட்சியளிப்பதாக ஹைதராபாத் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. அரசானது மக்களிடம் இருந்து அச்சத்தைப் போக்க எல்லாவித நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேலும் அங்குள்ள பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

வைரஸின் அறிகுறி சிறிதளவு தெரிந்தாலும் உடனே தெரிவிக்க வேண்டும் என அரசு சார்பில் அங்குள்ள மக்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது, மாஸ்க்குகள் வழங்குவது என அங்குள்ள அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு வருகின்றனர்.

More News

சாகச பிரியரான காட்டு மனிதன் பேர் கிரில்ஸ்; தெரிவிக்க விடும் திரில் பட்டியல்

முதுகு எலும்பு மூன்றாக உடைந்து மறுபடியும் எழுந்து நடக்கவே முடியாது என மருத்துவர்கள் கைவிரித்த ஒரு மனிதன்,

நேற்று 5.. இன்று 28.. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை..!

இருமல், தொண்டைவலி, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். வீட்டிலேயே இருக்க வேண்டாம்.

கொரோனா வந்தால் உதவ, ஏழை நாடுகளுக்கு ரூ.90,000 கோடியை ஒதுக்கியுள்ளது உலக வங்கி..!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீளுவதற்கு ஏழை நாடுகளுக்கு ரூ.90,00 கோடியை உலக வங்கி ஒதுக்கியுள்ளது.

"ஒரு நாள் முதல்வர்" பாணியில் "ஒரு நாள் கலெக்டர்"- அசத்திய பள்ளி மாணவி

முதல்வன் படத்தில், ஒரு நாள் முதல்வராகத் தீடிரென்று பதவியேற்றுக் கொண்ட நடிகர் அர்ஜுன் ஒரே நாளிலேயே முடங்கி கிடந்த அரசாங்கத்தை தட்டி எழுப்புவார்

இணையத்தை கலக்கும் சிம்ரனின் அட்டகாசமான டான்ஸ் வீடியோ 

கடந்த 90 களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக இருந்த நடிகை சிம்ரன் தற்போது ஒருசில படங்களில் மட்டுமே நடித்து வந்தாலும், அவர் தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்கள்