தாங்கள் வைத்துள்ள நம்பிக்கை நிறைவேற்றப்படும்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஸ்டாலின் நன்றி!

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க உள்ளது. தமிழக முதல்வராக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்களும் தமிழக தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் திமுகவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பதாவது: இசைப்புயல் ஆஸ்கார் விருது அழகான தங்களின் வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய அரசு செயல்படும்’ என்று கூறியுள்ளார்.

More News

வரும் 7 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.

கமல் தோல்வி குறித்து தனது பாணியில் டுவிட் போட்ட பார்த்திபன்!

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

குமரியில் வெற்றி பெற்ற விஜய் வசந்த்: குவியும் திரையுலகினர்களின் வாழ்த்துக்கள்!

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் காலியாக இருந்த கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது என்பது தெரிந்ததே

முதல்வர் பொறுப்பேற்றதும் ஸ்டாலின் போடப்போகும் முதல் கையெழுத்து என்ன?

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் முதல்முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்

தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சி அடையட்டும்: திமுக கூட்டணிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது என்பதும் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக கூட்டணி எதிர்க்கட்சியாக இருக்க போகிறது