மகளின் பெயரிலேயே ஆண்களுக்கு வலைவீசிய தாய்.. உறவை அறுத்த மகள்!


Send us your feedback to audioarticles@vaarta.com


தாய்லாந்தை சேர்ந்த சுபாத் என்ற பெண், தன் மகளின்பெயரில் முகநூல் மற்றும் சமுக வலைத்தளப் பக்கங்களை உருவாக்கி அதில் மகள் மற்றும் பேரக் குழந்தைகளின் படங்களைப் பகிர்ந்து அந்த அக்கவுண்டுகளிலிருந்து பல்வேறு ஆண்களுடன் ஆன்லைனில் பேசிப் பழகி அவர்களிடம் இருந்து பணம் பிடுங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
கடந்த வருடங்களில், இந்த பலே பெண்மணி, துறவி ஒருவரை தொடர்பு கொண்டு, அவருடன் பேசி, பழகிய நிலையில் துறவி அவரிடம் ஏமாந்ததோடு தமது துறவு வாழ்க்கையையே துறந்து அந்த பெண்ணுடன் வாழ தயாரான சுவையான தகவலும் வெளிவந்திருக்கும் நிலையில், தன் தாயின் நடத்தையால் மிகவும் வெறுப்புற்ற அவரது மகள் ஃபாண்டிவா, தனது முகநூலில் தன் தாயின் புகைப்படத்தையும், தன்னுடைய புகைப்படத்தையும் பகிர்ந்து தன் உண்மை நிலனையை தெளிவாக அறிவித்ததோடு, இனி தனக்கும், தனது தாய்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இனி அவர் செய்யும் எந்த மோசடி வேலைக்கும் தான் உத்தரவாதி அல்ல என்று பதிவிட்டிருக்கிறார்.
மிகவும் பரபரப்பாக பகிரப்பட்ட இந்த பதிவுக்கு நெட்டிஸன்கள் பலரும் பலவிதமாக பதிலளித்தனர். ஃபாண்டிவா, அவரது தாய், அவருக்காக செய்த பல தியாகங்களை நினைத்து அவரை மன்னிக்க வேண்டும் என்றும், வேறு சிலர் ஃபாண்டிவாவுக்காக பரிதாபப்படவும் செய்தனர்.
கடந்த 13 ஆம் தேதி ஹோன் க்ரஸே செய்தி சேனலில் தோன்றிய ஃபாண்டிவா, தான் தனது தாயை பலமுறை மன்னித்துவிட்டதாகவும், இப்போது, தன்னுடைய குழந்தைகள் வாழ்வைக் குறித்து பயப்படுவதாகவும் தெரிவித்தார். பல முறை மன்றாடியும் எச்சரித்தும் கூட தாய் செவி கொடுக்காததால், தான் தனது குடும்ப நலனுக்காக இதைச் செய்வதாகக் கூறினார்.
தாய்லாந்து சட்டத்தின் படி, பெற்றோர் மேல் வழக்கு பதிய பிள்ளைகளுக்கு உரிமை உண்டு. ஆனால், தான் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்றும், ஆபத்தில்லாத தூரத்தில் தான் தனது குழந்தைகளுடன் வாழ விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com