தமிழகத்தில் நாளை ஊரடங்கு இல்லையா? என்ன காரணம்?

  • IndiaGlitz, [Saturday,May 22 2021]

தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில் தமிழகத்தில் மேலும் 1 வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பேச்சு வார்த்தை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு விதிமுறைகள் எதுவும் கடைப்பிடிக்கப் படாது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தில் அடுத்த வாரத்திற்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. இதனால் சாதாரண மளிகைக் கடைகள் முதற்கொண்டு அத்யாவசியப் பொருட்களின் கடைகளும் திறக்கப்படாது என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அனைத்து விவரங்களையும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் தமிழக அரசு தெரிவிக்கும்.

இந்நிலையில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கி வைத்துக் கொள்வதற்காக தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு விதிமுறைகள் கடைப்பிடிக்கப் படாது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

More News

தொடரும் ஊரடங்கு...! ரயில்கள் சேவை ரத்து...!

கொரோனா பரவல் மற்றும் புயல் காரணமாக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்கள்  சேவையை ரத்து செய்துள்ளது

கொரோனா ஆன்டிபாடியை அளக்க புது கருவி? பயன்படுத்துவது எப்படி?

கொரோனா வைரஸ் உடலில் புகுந்தவுடன் சுவாச உறுப்பை காலி செய்து விடுகிறது.

பிரபலமாக திருநங்கைகள் குறித்து அவதூறு வீடியோ......! தர்மஅடி வாங்கிய டிக்டாக் திவ்யா...!

தான் யுடியூப்-பில் பிரபலமாகமாக வேண்டும் என்பதற்காக திருநங்கைகள் குறித்து அவதூறாக வீடியோ பதிவிட்ட, டிக்டாக் திவ்யா தர்ம அடி வாங்கியுள்ளார்.

ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிலிண்டர் வெடிப்பு… கோவையில் நடந்த கொடூரம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத வகையில் தொடர்ந்து தமிழக மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை நிலவி வருகிறது

தடுப்பூசி போட்டுகிட்டா காரக்குழம்பு சாப்பிடக்கூடாதாம்: கனியை கலாய்த்த நெட்டிசன்

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனின் டைட்டில் வின்னராக கனி வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து கனிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது