பிலிப்பைன்ஸ் - பாதாளச் சாக்கடை குழாய்களுக்குள் வசிக்கும் மக்கள்!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சாலையோர சிக்னலில் நின்ற ஒரு புகைப்படக் கலைஞர் எடுத்த ஒரு புகைப்படம் சமுக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் வசிக்கும் வீடற்றவர்களின் நிலமையை அந்த படம் உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளது.
மணிலா அருகேயுள்ள மகாதி பகுதியை சார்ந்தவர் வில்லியம் ராபர்ட்ஸ் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவரான வில்லியம் ராபர்ட்ஸ் பரபரப்பான காலை வேளையில் தன் இரு சக்கர வாகனத்தில் வந்த போது ஒரு சாலையோர சிக்னலில் காத்திருக்க வேண்டியிருந்து.
அப்போது வில்லியம்ஸ் தன் அருகே இருந்த பாதாளச் சாக்கடை மூடியை கழற்றிக் கொண்டு ஒரு பெண் வெளியே வருவதை பார்த்ததும் அதை தன் மொபைல் கேமிராவில் படங்களாக பதுவு செய்தார். வில்லியம் புகைப்படம் எடுப்பதை பார்த்த அந்த பெண் ஓடி மறைந்துவிட்டார்.
ஆனால் வில்லியம் தான் எடுத்த அந்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அடுத்தடுத்த நாட்களில் அந்த படம் பிலிப்பைன்ஸ் முழுக்க வைரலாகி பல சர்ச்சைகளைக் கிளப்பியது.
மணிலாவின் புறநகர் பகுதியில் இருக்கும் வீடற்ற மக்கள் தாங்கள் வாழ இடமில்லாததால் பாதாளச் சாக்கடையின் குழாய்களுக்குள் பதுங்கி வாழ்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அவ்வாறான பெண்களில் ஒருவர்தான் வில்லியம் எடுத்த புகைப்பத்தில் பதிவான பெண்.
இந்த புகைப்படம் வைரலானதும் பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் அந்த பெண்ணை உடனே கண்டு பிடித்து அவருக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மணிலா சமுக நலத்துறை ஊழியர்கள் வலை வீசித் தேடி ரோசி என்ற அந்த பெண்ணை கண்டு பிடித்தனர்.
ரோசியின் கதை வெளியே தெரிந்ததும் மேலும் பலரும் பாதாளச் சாக்கடை குழாய்களுக்குள் வசிக்கும் விழிம்பு நிலை மனிதர்களை படமெடுத்து சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
புகைப்படத்தில் இடம் பெற்ற ரோசியை சந்தித்த பிலிப்பைன்ஸ் சமுக நலத்துறை அமைச்சர் அரசு சார்பில் அவர் ஒரு துணிக்கடையை நிறுவ 80,000 பிசோக்களை வழங்கியுள்ளார்.அவருக்கு மேலும் பலரும் உதவ வந்த நிலையில் இதற்கு எதிர் மாறான கருத்துக்களும் சமுக வலைத்தளங்களில் உலா வர ஆரம்பித்திருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com
Comments