யூ ட்யூபில் “லைக்” போடச் சொல்லும் மோசடிக் கும்பல்; தாய்லாந்தில் அதிரடி நடவடிக்கை.


Send us your feedback to audioarticles@vaarta.com


தாய்லாந்தில் வாட்ஸ் ஆப் போன்ற “லைன்” என்ற செயலியில் போலியான அழகான ப்ரொஃபைல்களை பயன்படுத்தி யூ ட்யூபில் “லைக்” பட்டனை க்ளிக் செய்ய ஏராளமானவர்களை ஈர்க்கும் ஏமாற்று வலையமைப்பை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அழகிய தோற்றம் உடைய ஒரு இளைஞரின் படத்துடன் கூடிய “தோர்( "Tor (Nattapoom)" என்ற லைன் அக்கவுண்டை பயன்படுத்தி இந்த வலையமைப்பு ஏராளமானவர்களை தொடர்பு கொள்ள தொடங்கிய போது இது குறித்த புலனாய்வு தொடங்கியதாக பொலீஸ் லெட்டினெண்ட் ஜெனரல் ட்ரைட்ராங் பிவ்ஃபான் (கமிஷனர், சைபர்க்ரைம் இன்வெஸ்டிகேஷன் பீரோ) தெரிவித்தார்.
இந்த மோசடிக்காரர்கள், அவர்கள் கையில் சிக்கியவர்களுடன் சாட் செய்து படிப்படியாக நம்பிக்கையை வளர்த்துக் கொள்கின்றனர். இறுதியில் அவர்களை குறிப்பிட்ட அளவு பணத்தை கூடுதல் வருமானத் திட்டத்தில் முதலீடு செய்யவும், யூடியூப் வீடியோக்களுக்கு “லைக்” போட்டு பணம் சம்பாதிக்கவும் சொல்லி வற்புறுத்துகின்றனர்.
’…முதலில் லாபம் கிடைத்ததால், பாதிக்கப் பட்ட நபர்கள், இந்த திட்டத்தின் மீது நம்பிக்கை வைத்தனர். அடுத்தடுத்து சுமார் 15, 46,836 பாட் வரையிலும் பணபரிமாற்றம் நடைபெற்ற பின், ஒரு கட்டத்தில் அவர்களால் பணத்தை எடுக்க முடியாமல் போன போது தான் தாங்கள் ஏமாற்றப் பட்டிருப்பது அவர்களுக்குப் புரிந்தது..’ என்கிறார் லெட்டினெண்ட் ஜெனரல் ட்ரைட்ராங்.
தொடர்ந்து நடந்த போலீஸ் புலனாய்வில், சோங்க்ளாவைச் சேர்ந்த சரண்யா கேவ்ம்யூன் என்ற 33 வயது பெண் கைது செய்யப் பட்டார். மோசடிக் கும்பலைச் சேர்ந்த இவருக்கு எதிரான ஆதாரங்களுடன் குற்றவியல் நீதிமன்றத்தின் வாரண்டைப் பெற்று, சோன் புரி மாவட்டத்தில் இவரை காவல்த்துறையினர் கைது செய்தனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com
Comments