close
Choose your channels

சூர்யாவின் உயரத்தை கிண்டலடித்த தொகுப்பாளினிகளுக்கு ரசிகர்கள் பதிலடி

Thursday, January 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் அஜித், விஜய்க்கு அடுத்தபடியாக பெரிய நடிகராக இருந்து வரும் சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படம் பொங்கல் விருந்தாக வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தின் வெற்றியால் சூர்யாவும் அவரது ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கும் நிலையில் பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினிகள் இருவர் அவரது உயரத்தை கிண்டலடித்துள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

சூர்யாவின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் சூர்யாவுடன் முக்கிய கேரக்டரில் அமிதாப்பச்சன் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த தகவலை தொகுத்தளித்த நிவேதிதா மற்றும் சங்கீதா என்ற தொகுப்பாளினிகள் இந்த படத்தில் சூர்யாவுடன் அமிதாப்பச்சன் நடித்தால் சூர்யா ஸ்டூல் மீதேறி நின்றுதான் நடிக்கவேண்டும் என்றும் அமிதாப்பச்சனை உட்கார வைத்து நடித்தால் சரியாக இருக்கும் என்றும் கிண்டலடித்துள்ளனர்.

சூர்யாவின் உயரத்தை கிண்டலடிக்கும் நெட்டிசன்களுக்கு ஏற்கனவே 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் இடம்பெற்ற "நாம் என்ன உயரம் என்பது முக்கியமில்லை, எந்த உயரத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம்" என்ற வசனம் பதிலடியாக இருந்துள்ள நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த இரு தொகுப்பாளினிகளுக்கும் சூர்யாவின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.