close
Choose your channels

 5 முறை காதலைச் சொன்ன பிறகே நான் அவரை ஏற்றுக்கொண்டேன்… மனம் திறக்கும் அமெரிக்க முதல் பெண்மணி!

Tuesday, November 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 5 முறை காதலைச் சொன்ன பிறகே நான் அவரை ஏற்றுக்கொண்டேன்… மனம் திறக்கும் அமெரிக்க முதல் பெண்மணி!

 

தற்போது நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்லில் பெரும்பான்மை வெற்றிப் பெற்றிருக்கிறார் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன். இவருடைய வெற்றியால் ஜோ பிடனின் மனைவி ஜில் பைடன் அமெரிக்காவின் முதல் பெண்மணி எனும் அந்தஸ்தை பெறுவார். ஆங்கில ஆசிரியையாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜில், தற்போது அமெரிக்காவின் முதல் பெண்மணி எனும் அடையாளத்தோடு வரும் ஜனவரி 20 ஆம் தேதி முதல் வெள்ளை மாளிகையில் வசிக்கப் போகிறார்.

ஜில் தான் கல்லூரியில் படித்த காலத்தில் கால்பந்து வீரர் ஸ்டீவன்சன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு அந்தத் திருமணம் முறிந்து விட்டது. அதேபோல ஜோ பிடனின் முதல் மனைவியும் அவருடைய ஒரு பெண்‘ குழந்தையும் கடந்த 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கார் விபத்தில் உயிரிழந்து விட்டனர். அந்த விபத்தில் பியூ, ஹண்டர் எனும் ஜோ பிடனின் 2 மகன்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அந்த விபத்தில் உயிர் தப்பிய பியூ தனது 46 ஆவது வயதில் மூளை புற்றுநோயால் உயிரிழந்து விட்டார். தற்போது ஹண்டர் மட்டும்தான் உயிருடன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜில்லை சந்தித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அந்தத் திருமணத்தைப் பற்றி மனம் திறந்த ஜில்,

“அப்போது நான் ஜீன்ஸ் டீ ஷர்ட் போட்ட பையன்களோடு மையல் கொண்டிருந்தேன். இவர் ஸ்போர்ட்ஸ் கோட், ஷு போட்டுக்கொண்டு என் வாசலுக்கு வந்தார். கடவுளே லட்ச ஆண்டுகள் ஆனாலும் இவரோடு நமக்கு ஒத்து வராது என்று நினைத்தேன். அவர் என்னைவிட 9 வயது மூத்தவர். நாங்கள் இருவரும் ஒரு நபரைச் சந்திப்பதற்காக ஃபிளடெல்ஃபியாவில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு சென்றோம்.

ஐந்து முறை ஜோ காதலை சொன்ன பிறகே நான் அவரை ஏற்றுக்கொண்டேன். ஜோவின் பிள்ளைகள் மீண்டும் ஒரு தாயை பெற்று இழந்து விடக்கூடாது என்பதை நான் 100% உறுதி செய்து கொண்டேன்” எனத் தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் கடந்த 1981 ஆம் ஆண்டு ஜில்லுக்கும் ஜோ பிடனுக்கு அஷ்லே எனும் மகள் பிறந்திருக்கிறார். தற்போது 69 வயதாகும் ஜில் நீண்ட காலம் ஆசிரியராக பணியாற்றியவர். இவர் ஒரு இளநிலை மற்றும் 2 முதுநிலை பட்டங்களை பெற்றவர். கடந்த 2007 ஆம் ஆண்டு கல்வியியல் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.