பத்மபூஷன் விருதுக்கு பி.வி.சிந்து பரிந்துரை

  • IndiaGlitz, [Monday,September 25 2017]

'தல' என்று அன்புடன் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் தோனிக்கு பத்மவிருது அளிக்க வேண்டும் என பிசிசிஐ பரிந்துரை செய்த செய்தி குறித்து சமீபத்தில் பார்த்தோம். இந்த நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு பத்மபூஷன் விருது அளிக்க வேண்டும் என்று  விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

22 வயதான பிவி சிந்து ஏற்கனவே கேல்ரத்னா விருது, பத்ம ஸ்ரீ, அர்ஜூனா ஆகிய விருதுகளை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் முக்கிய விருதுகளில் ஒன்றான  பத்ம பூஷன் விருதுக்கு பி.வி.சிந்து பெயரை இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

தல தோனி மற்றும் பி.வி.,சிந்துவுக்கு இந்த விருது கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ஷேர்ன் வார்னே மீது ஆபாச நடிகை கூறிய திடுக்கிடும் புகார்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சுழற்பந்து வீச்சாளர்களில் உலகின் நம்பன் ஒன் இடத்தை பெற்றவருமான ஷேர்வார்னே மீது ஆபாச நடிகை ஒருவர் போலீசாரிடம் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் அஞ்சலி வந்தது ஏன்?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த வார புதிய வரவாக பிரபல நடிகை அஞ்சலி பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார்.

பிக்பாஸ் போட்டியாளர்களின் கவர்ச்சி உடைக்கு யார் காரணம்? வையாபுரி பேட்டி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்துடன் நிறைவு பெறவிருக்கின்றது. அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்

ரூ.10 கோடியை நெருங்கிவிட்ட தல அஜித்தின் 'விவேகம்'

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாகி எதிர்மறை விமர்சனங்களையும் கடந்து சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் நல்ல வசூலை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

'துப்பறிவாளன்' 2வது வார வசூல் எப்படி?

விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் மற்றும் முதல் வார இறுதி வசூல் அபாரமாக இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.