close
Choose your channels

தனுஷை பாராட்டி சிக்கலில் மாட்டிக் கொண்ட நடிகை ரம்யா!

Monday, January 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான 'மாரி 2' படம் அவரது ரசிகர்களை மட்டுமே திருப்தி செய்திருந்தாலும், அந்த படத்தில் இடம்பெற்ற 'ரெளடி பேபி பாடல் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனை செய்தது.

இதுகுறித்து தனுஷ் பதிவு செய்த ஒரு டுவீட்டை பாராட்டி நடிகையும் கர்நாடக மாநில அரசியல்வாதியுமான ரம்யா ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். ரம்யாவின் இந்த டுவீட்டுக்கு கன்னட ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

கன்னட படமான 'கேஜிஎப்' மற்றும் 'பயில்வான்' ஆகிய படங்களின் வெற்றி குறித்து கன்னட ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் அந்த படங்களை பாராட்ட மனமில்லாத ரம்யா, தனுஷ் படத்தை மட்டும் பாராட்டுவது ஏன் என்று பல கன்னட ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திற்கு போய் போட்டி போடவும் என்றும் ஒருசிலர் காட்டமாக பதிவு செய்துள்ளனர். தனுஷின் ஒரே ஒரு டுவீட்டை பாராட்டி டுவீட் போட்ட நடிகை ரம்யா சிக்கலில் மாட்டிக்கொண்டதோடு, அவரது அரசியல் வாழ்க்கையை தடம்புரட்டி போட்டுவிடும் போல் தெரிகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.