close
Choose your channels

'இந்தியன் 2' படத்தில் இணையும் பிரபல ஹீரோ

Wednesday, January 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' திரைப்படம் இம்மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் டெக்னீஷியன்கள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்த படத்தில் கமல்ஹாசனின் பேரன் கேரக்டரில் சிம்பு நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் எதிர்பாராத ஒருசில காரணத்தால் சிம்பு இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும், அவருக்கு பதில் இந்த படத்தில் பிரபல ஹீரோ சித்தார்த் இணையவுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாராபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் 'பாய்ஸ்' படம் மூலம் அறிமுகமான நடிகர் சித்தார்த் மீண்டும் 16 வருடங்கள் கழித்து ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.