சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: விடுதலையாக ஒருவாரம் இருக்கும் நிலையில் பரபரப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்தார்
இந்த நிலையில் அவர் வரும் 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆகப்போவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சசிகலாவின் வருகை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வந்தனர்.
இந்த நிலையில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சசிகலா சுவாசப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
நான்கு ஆண்டுகளாக சிறையில் இருந்த சசிகலா, விடுதலையாக இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது