உலக நாடுகளின் கொரோனா நிவாரண நிதி, ஜிடிபி விகிதத்தில் எவ்வளவு தெரியுமா???

கொரோனா தாக்கத்தை எதிர்க்கொள்ள உலக நாடுகள் ஹெலிகாப்டர் மணியை அள்ளி வீசியிருக்கின்றன. அதாவது உற்பத்தியே இல்லாத நேரங்களில் அந்நாட்டின் மத்திய வங்கி கடன் பத்திரங்களை வாங்கிக் கொண்டு அரசுக்கு பணத்தை அச்சடித்துக் கொடுப்பதுதான் ஹெலிகாப்டர் மணி எனப்படுகிறது. அப்படி கடன் பத்திரங்களை வாங்கிக்கொண்டு அச்சடித்துக் கொடுப்பதால் அந்தக் கடனை மத்திய அரசு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அதே நேரத்தில் உற்பத்தியே இல்லாமல் மக்களுக்கு பணத்தைக் கொடுப்பதால் பணவீக்கம் வருமோ என்ற கவலையும் தேவையில்லாதது என Imf அறிவுறுத்தி இருக்கிறது. ஒருநாட்டில் பொருளதாரம் சரிந்து, வீழ்ச்சியைச் சந்திக்கும் போது அந்நாட்டின் உற்பத்தியை அதிகப் படுத்துவதற்கு தேவையான கடன் தொகையை வாரி வழங்க வேண்டும். அதே நேரத்தில் மக்களின் வாங்கும் சக்தியையும் அதிகப்படுத்த வேண்டும். இதுவும் ஒரு அரசின் கடமையாகவே கருதப்படுகிறது.

மக்களின் அன்றாடத் தேவைகளைப்பூர்த்தி செய்து அடுத்து சிறு, குறு நிறுவனங்களின் உற்பத்தியைப் பெருக்க கடனை வழங்கி அல்லது வாங்கும் கடனுக்கான வட்டியை குறைத்து நேரடி உற்பத்திக்கு ஒரு அரசு தேவையான வழிமுறைகளை செய்ய வேண்டும். இத்தகைய பணிகளுக்கு எல்லாம் அதிகபடியான பணம் தேவைப் படுகிறது. இப்படி எவ்வளவு பணத்தை செலவு செய்யலாம் என்ற வரையறை பற்றியும் உலக பொருளாதாரத்தைக் கணிக்கும் Imf நிறுவனம் வகுத்துக் கொடுக்கிறது. அதாவது கொரோனா நேரத்தில் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் குறைந்தது 10 விழுக்காடு வரைக்கும் நிவாரணத் தொகையாக மக்களுக்கு வழங்கலாம். 10 விழுக்காடு  வரைக்கும் வழங்கப்படும் நிவாரணத் தொகையால் பொருளாதாரத்திற்கு அதிகபடியான பாதிப்புகள் எதுவும் நேராது எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த அறிவுரைகளை ஏற்று உலகின் பல நாடுகள் கொரோனா நிவாரண நிதியை பலத் திட்டங்களின் வழியாக தன் நாட்டு மக்களுக்கு வாரி வழங்கியிருக்கிறது. அப்படி வழங்கிய சில நாடுகளின் தொகை குறித்து சிறு தொகுப்பு.

ஜப்பான் 21.1%

அமெரிக்கா 13.0%

ஸ்வீடன் 12.0%

ஜெர்மனி 10.7%

இந்தியா 10.0%

பிரான்ஸ் 9.3%

ஸ்பெயின் 7.3%

இத்தாலி 5.7%

இங்கிலாந்து 5.0%

சீனா 3.8%

தென் கொரியா 2.2%

இந்தக் கணக்குகள் ஓரளவு பொருளாதார தேக்கம் கொண்ட நாடுகளுக்கு பெருந்தும் என்றாலும் உள்நாட்டு உற்பத்தியே குறைவாக இருந்து ஏற்கனவே பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் பல நாடுகள் மற்ற நாடுகளின் உதவியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. பல ஆப்பிரிக்கா நாடுகளின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இப்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு இதுவரை  ஐ.நா. சபையின் உலக உணவு வழங்கல் அமைப்பு பெரும் உதவி புரிந்து வந்தது. தற்போது கொரோனா பொருளாதார வீழ்ச்சியால் அந்த அமைப்புக்கு நன்கொடை வழங்குவோரின் எண்ணிக்கை குறைந்து நிலைமை மேலும் சிக்கலாகி வருகிறது.  

More News

தலைவன் இருக்கிறான் படத்தில் 'விஸ்வரூபம்' ஹீரோயின்கள்?  பரபரப்பு தகவல் 

கமல்ஹாசன் நடிக்க உள்ள 'தலைவன் இருக்கிறான்' என்ற திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம்.

லாக்டவுன் இல்லைன்னு சொன்னா இப்படித்தான் ஆடுவேன்: ரஜினி, அஜித் நாயகி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் கோடிக் கணக்கான பொதுமக்கள் திண்டாட்டத்தில் உள்ளனர்.

ஆன்லைனில் தந்தூரி சிக்கன் ஆர்டர் செய்த கொரோனா நோயாளிகள்: மருத்துவர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவ மருத்துவமனைகளில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சிலரின் அட்டகாசம் தாங்க முடியாமல் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தவித்து வருவதாக செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1 லட்சத்து 6 ஆயிரம் புதிய கொரோனா நோயாளிகள்: WHO அதிர்ச்சி!!!

கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரமாக பதிவாகி இருப்பதாக

24 மணி நேரத்தில் 5609 பேர் பாதிப்பு: இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று 1,06,750ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5609 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால்