நிதானம் தவறிய நீதி தேவதை…!


Send us your feedback to audioarticles@vaarta.com


அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் முன்னாள் பெண் மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த அவரது காதலரை சுட்டு காயப்படுத்தியதற்காக 13லிருந்து 30 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை அனுபவிக்க உள்ளார்.
ஸோனியா மேக்நைட் என்னும் அந்த பெண் நீதிபதி கொலை முயற்சி மற்றும் வன்முறைத் தாக்குதல் புகார்களின் பேரில் குற்றம்சாட்டப் பட்டார். சென்ற மாதம் நடந்த முதல் விசாரணையின் போது தமது பதவியை ராஜிநாமா செய்த அவரை விசாரித்த நீதிபதி, அவர் செய்த தவறுக்காக எந்த வருத்தமும் படவில்லை என்று தெரிவித்தார்.
தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தெரிவித்த மேக்நைட், மேல் முறையீடு செய்திருப்பதாக அவரது வழக்கறிஞர் அறிவித்தார்.
சென்ற ஆண்டு ஃபெப்ரவரி மாதம் வரை, மேக்நைட், தமது காதலருடனான உறவு முறிந்த நிலையிலும் அவர் வீட்டிலேயே தொடர்ந்து வசித்த போது, அந்த நபர் இவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தி இருக்கிறார் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேக்நைட் மிகவும், ”பொஸசிவ்வான” நபர் என்றும் முன்னாள் காதலர் அவரை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னது எவ்வாறு அவரை கோபப்படுத்தி இருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் விவாதித்தனர். ஆனால், மேக்நைட்டின் வழக்கறிஞர் தாக்கப்பட்ட நபர் தாக்கிய நபரை அடையாளம் காணவில்லை என்று கூறினார். ஆனால், மேக்நைட்டின் முன்னாள் காதலர், அவர் சுடும் போது தான் பார்க்கவில்லை என்றாலும், அந்த நேரத்தில் வீட்டில் மேக்நைட் மட்டும் தான் இருந்தார் என்று உறுதியாகச் சொன்னார்.
2015ல் டாஃபின் மாவட்டத்தில் நீதிபதியாக பதவியேற்ற மேக்நைட்டின் கடந்த கால குற்றப் பின்னணி அவருக்கு எதிராகவே சாட்சியளிக்கிறது. 2023 நவம்பரில், அவரது மகன் தொடர்பான ஒரு போக்குவரத்து விதி மீறல் வழக்கில், நீதிமன்ற விதிகளை மீறிய குற்றத்திற்காக சம்பளம் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்ட மேக்நைட், அதன் பின்னர் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறார்.
2019 ஆம் ஆண்டிலும் அவர் தமது முதல் கணவரை சுட்டு காயப்படுத்தினார் என்றும், ஆனால் அது தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் அவர் மீது குற்றம் சாட்டப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com