close
Choose your channels

கொரோனா செய்த ஒரே நல்ல காரியம்!!!  

Saturday, March 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா செய்த ஒரே நல்ல காரியம்!!!  


கொரோனா Covid-19 உலகின் அனைத்து நிலைமைகளையும் கடுமையாகப் பாதித்துத் இருக்கிறது. சுற்றுச்சூழலைத் தவிர. தற்போது உலகம் முழுவதும் நாம் சுவாசிக்கும் காற்றின் தரம் உயர்ந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உலகின் அனைத்து தொழில் நிறுவனங்களும் முடப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் இயங்கும்போது வெளியிடும் கடும்புகைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் காற்று மாசுபாட்டின் அளவு பெரும்பாலும் குறைந்து இருக்கிறது.

தற்போது, சீனாவின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படம் பெரும் வியப்பையே கொடுத்திருக்கிறது. காரணம் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த 3 மாதங்களாக பெரிய தொழிற்சாலைகள் முதற்கொண்டு அனைத்தும் முடக்கப்பட்டன. இதனால் காற்றின் மாசுபாடு முழுவதுமாகக் குறைந்திருக்கிறது. Stanford பல்கலைக்கழக விஞ்ஞானி “கொரோனா தடுப்பு நடவடிக்கைகக்காக பூட்டப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்துவரும் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதன் மூலம் சுமார் 77,000 உயிர்களைக் காப்பாற்ற முடியும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த அளவு உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஆனால், இந்த நீலவானம் இப்படியே தொடருவதற்கு சிறிதும் வாய்ப்பில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் போது நிறுத்தப்பட்ட உற்பத்தியைப் பெருக்குவதற்கு தொழிற்சாலைகள் கடுயைமான முயற்சிகளை மேற்கொள்ளும். அதனால் கார்பன் டை ஆக்ஸைடு காற்றில் கலக்கப்படும் கார்பன் டை ஆக்ஸைடு அளவு பன்மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.