close
Choose your channels

மோடியை வெறுக்க வேண்டாம், தேசத்தை நேசியுங்கள்: பிரபல நடிகர் கோரிக்கை

Thursday, May 23, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மோடியை வெறுப்பதற்கு பதில் தேசத்தை நேசியுங்கள் என்று பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி மீண்டும் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றிவாகை சூடியுள்ளது. மோடியின் இந்த வெற்றியை நம்ப முடியாமல் எதிர்க்கட்சி தலைவர்கள் திகைத்து போயுள்ளனர்,.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரும், 'பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அவரது கேரக்டரில் நடித்தவருமான நடிகர் விவேக் ஓபராய் தனது சமூக வலைத்தளத்தில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

நரேந்திர மோடிக்கு எதிராக ஒன்றிணைந்துள்ள அனைத்து அரசியல் தலைவர்களுக்கு எனது வேண்டுகோள். மோடியை வெறுப்பதற்கு சிறிது நேரமும், தேசத்தை நேசிப்பதற்கு அதிக நேரமும் செலவிடுங்கள். ஜனநாயகம் தழைக்க எதிர்க்கட்சிகள் ஆரோக்கியமாக செயல்பட வேண்டும் ஜெய்ஹிந்த்' என பதிவு செய்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.