close
Choose your channels

பில்கேட்ஸ்- மிலிண்டா மணவாழ்க்கை கசந்தது ஏன்? வெளியான தகவல்!

Tuesday, May 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகின் மிகப்பெரிய பணக்காரத் தம்பதிகளான பில்கேட்ஸ்– மிலிண்டா தம்பதி கடந்த சில தினங்களுக்கு முன்பு விவகாரத்து பெற உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டனர். இதையடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஒரு தகவல், மைக்ரோசாஃப் நிறுவனப் பங்குகளின் தற்போதைய விலை நிலவரம் என்ன என்பதாகத்தான் இருந்தது. அந்த அளவிற்கு தொழில் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தம்பதிகள் விவாகரத்து குறித்து அறிவிப்பு வெளியிட்டதற்கு என்ன காரணம் என்பதையும் ஊடகங்கள் தற்போது கிளறி வருகின்றன.

மேலும் இவர்களுக்குச் சொந்தமான மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் கீழ் உள்ள சொத்துகளை இருவரும் எப்படி பிரித்துக் கொள்ளப் போகிறார்கள், அதோடு மீண்டும் மிலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை தொடர்ந்து செயல்படுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இயங்கி வரும் பிரபல பத்திரிக்கையான The Wall street பில்கேட்ஸ் தம்பதிகளின் விவாகரத்து குறித்து கருத்து வெளியிட்டு உள்ளது.

அதில் பாலியல் வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்றவரும் மறைந்த தொழில் அதிபருமான ஜெப்ரி எப்ஸ்டெய்ன் என்பவருடன் பில்கேட்ஸ் மிகவும் நெருக்கம் காட்டியதுதான் இந்த விவாகரத்துக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்பட்டு உள்ளது. அதாவது பில்கேட்ஸ் ஜெப்ரி எப்ஸ்டெய்ன் என்பவருடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்ததாகவும் அதோடு அவரை பலமுறை நேரில் சந்தித்தாகவும் கூறப்படுகிறது.

ஜெப்ரி எப்ஸ்டெய்ன் அமெரிக்காவில் நிதி சார்ந்த தொழிலில் ஈடுபட்டு பின்னர் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். அதோடு சிறுமிகளை வைத்து பாலியல் சார்ந்த தொழிலில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெப்ரி எப்ஸ்டெய்ன் சிறையிலேயே உயிரிழந்தும் போகிறார்.

இந்த நபருடன் நட்பு பாராட்டியது தொடர்பாக பில்கேட்ஸிற்கும்- மிலிண்டாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் இந்த கருத்து வேறுபாடு கடந்த 2019 ஆம் ஆண்டே துவங்கி விட்டதாகவும் இதனால்தான் 27 வருட மணவாழ்க்கை தற்போது முடிவிற்கு வந்து இருப்பதாகவும் The Wall street பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மணவாழ்க்கை முறிவு என்பது வெளிநாடுகளில் சகஜமான ஒன்று. ஆனால் உலகின் மிகப்பெரிய பணக்காரத் தம்பதிகள் அதோடு மிகப்பெரிய தொழில் அதிபர்கள் விவாகரத்துப் பெற்று பிரியும்போது அவர்கள் சார்ந்த சொத்துக்களும் சரிந்து போகும் என்பதும் குறிப்பிடத்தகக்து. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அமேசான் நிறுவனத்தின் செயல்தலைவர் ஜெஃப் பெசோஸ் தனது மனைவியை விட்டு பிரிந்தார். இதனால் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த அவருடைய சொத்து மதிப்பில் கால்வாசி குறைந்து போனதும் குறிப்பிடத்தகக்து. அதோடு அமோசான் நிறுவனத்தின் பங்குகளும் சரிந்தன. இதேபோன்று கூகுள் நிறுவனத்தின் பங்குகளும் சரிந்து போய்விடுமா என்பதே தற்போது பலரது சந்தேகமாகவும் இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.