வெப்பம் அதிகமாக இருந்தா கொரோனா பரவாதா??? அறிஞர்கள் என்ன சொல்றாங்க???

  • IndiaGlitz, [Thursday,April 02 2020]

 

ஆப்பிரிக்கா நாடுகளை பொறுத்தவரை, கொரோனா நோய்த்தொற்று குறைவான அளவில்தான் பாதித்து இருக்கிறது. அந்த எண்ணிக்கையும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் ஏற்பட்டது. இதுபோன்ற தரவுகளைப் பார்க்கும்போது கடுமையான வெப்பநிலை இருக்கும் பகுதிகளில் கொரோனா தொற்று பரவாது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படுவது இயல்பு. ஆனால் இதை ஆய்வுலகம் இன்னும் தெளிவுப்படுத்தவில்லை என்பதும் முக்கியமானது. இதுகுறித்து பல கட்டமாக நடத்தப்பட்டு வரும் ஆய்வுகள் வெவ்வேறான முடிவுகளைத் தருகின்றன.

முன்னதாக, அமெரிக்காவின் எம்.ஐ.டி ஆய்வு நிறுவனம் அதிக வெப்ப நிலவும் பகுதிகளில் தாக்கம் குறைவாக இருக்கும் எனக் கூறியிருந்தது. அதையொட்டி இந்தியாவைச் சேர்ந்த சர்வதேசப் புகழ் பெற்ற குடல்-இரப்பை சிகிச்சை நிபுணர் டி. நாகேஷ்வர் ரெட்டி, “32 டிகிரி வெப்பத்துக்கு மேல் கொரோனாவால் ஆதிக்கம் செலுத்த முடிவதில்லை. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் இதற்கும் அதிகமாகத்தான் இருக்கிறது. குளிர்வசதியுள்ள இடங்களில் வேண்டுமானால் அது தப்பிப் பிழைக்கலாம். நாம் கொரோனாவை வெல்வோம், சமூக இடைவெளி நடவடிக்கை மொத்தமாகவே ஐந்து வாரங்களுக்கு மேல் இந்தியாவில் தேவைபடாது” எனத் தெரிவித்து இருக்கிறார். இதே கருத்தையொட்டி, தற்போது மத்திய அரசும் ஏப்ரல் 14 க்கு மேல் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படாது எனத் தெரிவித்து இருக்கிறது.

கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வில் இது பருவகால தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. குளிர்காலங்களில் ஏற்படும் சளி, காய்ச்சல் அல்லது கோடைகாலங்களில் தோன்றும் அம்மை, தட்டம்மை போன்றவற்றில் இருந்து கொரோனா வைரஸ் முற்றிலும் வேறானது. எனவே பருவகால நோய்களுடன் வைத்து இந்த வைரஸ் கிருமியை குறைத்து எடைபோட முடியாது என ஆய்வாளர்கள் ஒரு பக்கம் எச்சரிக்கை விடுக்கின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கியுள்ள நாடுகளான சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் கடும் குளிர்பகுதிகளாக இருக்கின்றன. கடந்த டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சீனாவில் ஒரு பெரும் புயலை ஏற்படுத்தி இப்போதுதான் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறது. நிலைமை கட்டுக்குள் வருவதற்கு 3 மாதங்கள் ஆகியிருக்கின்றன.

ஹார்டு வேர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு ஆராய்ச்சி பருவநிலை மாற்றத்திற்கு கொரோனா வைரஸ் பொருந்தாது எனக் குறிப்பிட்டு இருக்கிறது. முன்னதாக 5-11 டிகிரி சென்டிகிரேடு உள்ள குளிர் பிரததேசங்களில் இந்த கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். வெப்ப நிலை அதிகமுள்ள பிரதேசங்களில் பாதிப்பு குறைவாக இருக்கும் என்பது போன்ற முடிவுகளையொட்டி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவில் ஹார்டுவேர்டு பல்கலைக்கழகம் இது பருவநிலை மாற்றத்துக்கு பொருந்தக்கூடிய வைரஸே இல்லை எனத் தெரிவித்து இருக்கிறது.

மேலும், மக்களின் நடவடிக்கைகளைப் பொறுத்தே கொரோனா வைரஸின் பரவல் அமையும் எனவும் தெரிவித்து இருக்கிறது. சுற்றுச்சூழல் மிகவும் குறைவாக்கத்தான் இந்த வைரஸ் கிருமியுடன் நெருக்கமாக இருக்கிறது. 2003 இல் பரவிய SARS-Covid வைரஸ் பரவல் மிகக்குறைந்த வேகத்தில் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் வெப்பநிலை 22-25 சென்டிகிரேடில் அதன் பரவல் தன்மை அதிகமாகவும் 40-50 டிகிரி சென்டிகிரேடில் பரவல் தன்மைக்குறைவாகவும் இருந்தது எனவும் தெரிய வந்திருக்கிறது. சார்ஸ் பரவலை வைத்துக்கொண்டு கொரோனா நோய்த்தொற்றை கணிக்கமுடியுமா என்ற ஆய்வில் இத்தகைய முடிவுகள் எட்டப்பட்டு இருக்கின்றன. ஆனால் இது கொரோனா வைரஸ்க்கு பொருந்துமா என்பது குறித்தும் சந்தேகம் எழுப்பப்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸின் புரத மூலக்கூறுக்கு மேல் உள்ள எண்ணெய் போன்ற அதன் படலம் வைரஸ் பரவல் தன்மையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. குளிர் பிரதேசங்களில் வைரஸ் மேலுள்ள எண்ணெய் படலம் ஈரப்பதத்தினால் மேலும் இறுகி கிருமிக்கு வசதியான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்துவிடுகிறது. ஆனால் வெப்ப மண்டல பிரதேசங்களில் இந்த புரதத்தின் மேலுள்ள எண்ணெய் படலம் அதிக வேகத்தில் உருகும் தன்மையுடன் இருப்பதால் பரவலைக் கட்டுப்படுத்த வெப்பம் மிகவும் உதவியாக இருக்கலாம். வெப்பநிலை அதிகமாக உள்ள நாடுகள், பிரதேசங்களில் வைரஸ் அதிகநாட்களுக்கு வாழாமல் தடுக்கும் தன்மைக்காணப்பட்டாலும் இது தொற்று நோய் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். காரணம் பருவக்காலங்களில் வரும் நோய்கள் குறுகிய வேகத்தில் வந்து பருவ நேரம் முடிந்தவுடன் காணாமல் போய்விடும். ஆனால் கொரோனா ஒரு தொற்று நோய். அதிக வெப்பம் அதன் வாழும் நாட்களை வேண்டுமானால் குறைக்கலாம். ஆனால் பரவுவதை வெப்பத்தால் தடுக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சிவகார்த்திகேயன் பட வசனத்தை சரியான நேரத்தில் ஞாபகம் செய்த கலெக்டர்

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸில் இருந்து பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது

வனிதாவின் முதல் பிறந்த நாள் புகைப்படம்: சிவாஜி மடியில் தவழும் அரிய காட்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்டவர் வனிதா. யாரையும் பேச விடாமல் அவர் மட்டுமே பேசுவார் என்றும், தேவையில்லாத விஷயத்தில் மூக்கை நுழைப்பார்

கொரோனா என்பதன் பொருள் என்ன??? ஏன் இந்த பெயர் சூட்டப்பட்டது???

கொரோனா வைரஸ்கள் ஒரு ''Enveloped Viruses" என்ற குடும்பத் தொகுப்பை சார்ந்தவை. இதற்கு “எண்ணெய் படலமான உறைக்குள் இருப்பது“ எனப் பொருள் சொல்லப்படுகிறது.

நெட்பிளிக்ஸில் பார்க்க வேண்டிய பத்து சிறந்த படங்கள்

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு வாரமாக வீட்டில் இருக்கும் பொதுமக்களுக்கு தற்போது இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி தான். அதிலும் சீரியல்கள் படப்பிடிப்பு நடைபெறவில்லை

டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய மேலும் இருவருக்கு கொரோனா!

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்