0%  மாசில்லாத பருவ நிலை - உலகப் பொருளாதார மாநாட்டில் கிரேட்டா துன்பர்க் 

  • IndiaGlitz, [Friday,January 24 2020]



கடந்த வருடம் பருவ நிலை மாற்றத்தைக் குறித்து உலகத் தலைவர்களைக் குற்றம் சாட்டியிருந்தார் 16 வயது சிறுமி கிரெட்டா துன்பெர்க். “எங்கள் வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது” எனப் பருவ நிலைக் குறித்து துன்பெர்க் ஐநா சபையில் பேசிய போது உலக நாடுகள் அனைத்தும் அவரை கவனித்தன என்பது மிக முக்கியமானது.

உலகம் முழுவதிலும் பருவ நிலையில் அதிகபடியான மாற்றங்களும் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதைக் குறித்து கிரேட்டா துன்பெர்க் பொது மக்களிடமும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தற்போது வளர்ந்து வருகின்ற பொருளாதார மண்டலங்கள் எவ்வாறு பருவ நிலைமைகளில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது என்றும் அதற்கு உலக நாடுகளின் அரசியல் எவ்வாறு பொறுப்பாகிறது என்பதைக் குறித்தும் மாநாட்டில் பேசியுள்ளார். தற்போது 1.5 % மாசுபாடு இல்லாத பருவ நிலையை நோக்கி உலக நாடுகள் சிந்தித்து வருகின்றன. அதற்கான வேலைப்பாடுகளில் இறங்கியுள்ளதாக பல உலகத் தலைவர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ள நிலையில் இந்த பொருளாதார மாநாடு நடைபெற்றது என்பதும் குறிப்படத் தக்கது.

சென்ற வாரம் தனது 17 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய இவர் ஜனவரி 22 அன்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த உரையில் உலகின் பருவ நிலை மாற்றத்தைச் சரி செய்ய இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப் படவில்லை எனக் கண்டனம் தெரிவித்தார்.
‘எங்களுக்கு குறைந்த அளவு கார்பன் உடைய பொருளாதார நிலைமை தேவையில்லை; குறைந்த அளவு கார்பன் உமிழ்வு கொண்ட பருவச் சூழலும் பாதிப்பு கொண்டதுதான்; கார்பன் மாசுபாடு முழுவதுமாகக் குறைக்கப்பட வேண்டும்’ என்றார்.


மேலும், “கார்பன் மாசுபாட்டைக் குறைக்கும் தொழில் நுட்பங்கள் நம்மிடம் இருக்கும் வரை நாம் 0% மாசுபாடு இல்லாத சூழலைக் பற்றி சிந்திக்க மாட்டோம்; எனவே கார்பன் மாசுபாட்டை தொழில் நுட்பங்களின் உதவியால் குறைப்பதை விட்டு விட்டு, முழுவதுமாக மாசுபாடு இல்லாத சூழலை குறித்து சிந்திப்போம். 0% மாசுபாடு இல்லாத பருவ நிலை கொண்ட சூழலையே நாங்கள் விரும்புகிறோம்’‘ எனத் தெரிவித்தார்.

“சென்ற வருடம் நான் ஐநா சபையில் பேசும்போது பருவ நிலை மாற்றத்தைக் குறித்து பேசினேன். நான் உலக மக்கள் பீதி கொள்வதற்காக அப்படி பேசவில்லை. பருவ நிலையைப் பற்றி பேசி மக்களை பயமுறுத்த வேண்டாம் என்று பலர் எச்சரித்துள்ளனர். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலை கொள்ள வேண்டாம். இது நல்ல முன்னேற்றம் தான்” என்று கூறியுள்ளார்.

மேலும் உலகத் தலைவர்களை நோக்கி சில கருத்துக்களை அந்த உரையில் பதிவு செய்திருந்தார். ‘இன்று கூட தொழில் நுட்பங்களை நம்புமாறு பொது மக்களிடம் சொல்லாதீர்கள். தொழில்நுட்பங்கள் ஒருபோதும் பருவ நிலை மாற்றத்தைச் சரிப்படுத்தாது. குறைந்த அளவு கூட பருவ நிலையைச் சரிப்படுத்த வேண்டும் என்று எந்த முயற்சியும் மேற்கொள்ளப் படவில்லை. இந்நிலையில் 1.5% போன்ற எண்களைக் கூறி எங்களை ஏமாற்றாதீர்கள். 0% மாசுபாடு இல்லாத சுற்றுச் சூழலை நாங்கள் எதிர்ப் பார்க்கிறோம்’ என்றார்.

தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் மரங்கள் நடப்பட்டு வருவது வரவேற்கத் தக்கதுதான். அதே நேரத்தில் அமேசான் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் அதிகளவு மரங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. உலகில் வலது இடது போன்ற அரசியல் நெருக்கடிகளைக் கவனிப்பதற்கு இளம் தலைமுறையினருக்கு நேரமில்லை. எந்த அரசியல் கொள்கைகளும் பருவ நிலை மாற்றத்தில் பெரிய மாற்றங்களை இது வரை கொண்டு வரவில்லை. உலக அரசியல் நிலைமைகள் கவனிக்காமல் விட்டதால்தான் இப்போது தீப்பிடித்து வருகிறது எனப் பேசி முடித்தார். சுவிட்சர்லாந்து டாவோஸில் நடைபெற்ற
பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதற்கு பின்பு கிரேட்டா துன்பர்க் உரையாற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது.

More News

பிறந்த நாள் கேக்கை வாளால் வெட்டிய நடிகர் மீது வழக்கு!

பிரபல ரவுடிகள் தங்களுடைய பிறந்தநாளை வாளால் கேக் வெட்டி கொண்டாடுவார்கள் என்று பல செய்திகள் வெளியாகியதை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம்.

ரஜினி மீது தாக்கல் செய்த மனு திடீர் வாபஸ்: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பெரியாரை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் இதுகுறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திராவிட விடுதலைக் கழகம் என்ற

செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி: தரவரிசையில் 28வது இடத்தில் உள்ள வீராங்கனை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சீனாவின் Wang Qiang

சனிப்பெயர்ச்சி எப்போது நிகழப்போகிறது- ஜனவரி 24 ? டிசம்பர் 26 ?

நமது எதிர்காலத்தைக் குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் பலருக்கு சுவாரசியத்தை தருகிறது

குட்டித்தளபதியை விரைவில் எதிர்பார்க்கலாம்: விஜய் பெற்றோரை சந்தித்த ரசிகர் பேட்டி

குட்டி தளபதி என்று அழைக்கப்படும் தளபதி விஜய்யின் மகன் சஞ்சயை விரைவில் திரையுலகில் எதிர்பார்க்கலாம் என சமீபத்தில் விஜய்யின் பெற்றோரை சந்தித்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மகேஷ்