சண்டைக் காட்சிக்காக 1 கோடி ரூபாயில் செட்… நடிகர் ஜெய் படம் குறித்த அசத்தலான தகவல்!

  • IndiaGlitz, [Thursday,April 21 2022]

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்துவரும் நடிகர் ஜெய் தற்போது இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் உருவாக்கிவரும் “பிரேக்கிங் நியூஸ்“ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஒரு காட்சிக்காக 1 கோடி ரூபாய் செலவில் கார்கோ விமான செட் போடப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் உருவான “குற்றமே குற்றம்“ திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ரிலீசானது. இதையடுத்து அவர் “பிரேக்கிங் நியூஸ்“ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் படமான இந்தப் படத்தில் கதைப்படி வில்லன்களுடன் நடிகர் ஜெய் விமானத்தின் மேல் நின்று கொண்டு சண்டை போடுகிறார். இதற்காக சென்னை புறநகர் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் 1 கோடி ரூபாய் செலவில் சரக்கு விமானம் போன்றே பிரம்மாண்ட செட் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருவதாக இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விமானத்தின் செட்டுக்காக பழைய பயணிகள் விமானம் ஒன்றை கார்கோ விமானமாக மாற்றியதாகவும் வரும் 2025 இல் இந்தக் கதை நடப்பதுபோல படமாக்கப்படுவதால் விமானத்தை நவீனமாக்கி இருப்பதாகவும் இயக்குநர் ஆண்ட்ரு தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ஜெய் இந்தத் திரைப்படத்தில் டூப் போடாமல் உற்சாகமாக நடித்து வருவதால் விரைவாக படமாக்க முடிகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக பானு ரெட்டி நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொண்டுள்ள இந்தப் படத்தில் 100 ரோபோக்கள் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

பிரபல நடிகருக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்த ஐக்கிய அரபு அமீரகம்!

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகராகவும் தென்னிந்திய நடிகர்

இவருக்கு டான்ஸ் தெரியுமா? வைரலாகும் ஒலிம்பிக் வீராங்கனையின் அரபிக்குத்து வீடியோ!

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து தளபதி விஜய் நடிப்பில் உருவான “பீஸ்ட்“ திரைப்படத்தின்

300 ரூபாயுடன் வீட்டை விட்டு ஓடி வந்தாரா? ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த கேஜிஎஃப் நடிகர்!

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் “கேஜிஎஃப்2“ திரைப்படம் இந்த மாதம் 14 ஆம் தேதி ரிலீசானது. இந்தத் திரைப்படம்

'கே.ஜி.எஃப்' தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த சுதா கொங்காரா: ஆரம்பமே மாஸ் தான்!

'சூரரைப்போற்று' இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வந்து உள்ளது என்பதும் இந்த படத்தை 'கே.ஜி.எஃப்' மற்றும் 'கேஜிஎப் 2 ' படங்களை தயாரித்த

செம லவ் ஸ்டோரி: 'அன்பிற்கினியாள்' கீர்த்தி பாண்டியனின் அடுத்த படம்!

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகளும் 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படத்தின் நாயகியுமான கீர்த்தி பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.