close
Choose your channels

போன வருஷம் இதே நாளில்... டுவிட்டரில் டிரெண்டாக்கிய விஜய் ரசிகர்கள்!

Tuesday, September 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் அட்லி இயக்கிய திரைப்படம் ’பிகில்’. இந்த படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் சுமார் 300 கோடி ரூபாய் வசூலை குவித்தாக கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடி இருப்பார் என்பதும் ஏஆர் ரகுமான் இசையில் விவேக் பாடல் வரிகளில் உருவான இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இதே நாளில்தான் அதாவது செப்டம்பர் 1ஆம் தேதி தான் இந்த ’வெறித்தனம்’ பாடல் வெளியானதாக விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு #1YearOfVerithanam என்ற ஹேஷ்டேக்கையும் தற்போது ட்ரெண்டாகி வருகின்றனர். இது குறித்து அதிகளவிலான ட்வீட்டுகள் பதிவாகி வருவதால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிகில் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு ஆண்டு முடியப்போகும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் இன்னும் டுவிடட்ரில் டிரெண்ட் ஆகி வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.