அரசு இதழில் இடம்பெற்ற 10.5% உள் இடஒதுக்கீடு செய்தி… முதல்வருக்கு குவியும் பாராட்டு!

வன்னியர்கள் 40 ஆண்டு காலமாக இடஒதுக்கீட்டு முறையில் உள் இடஒதுக்கீட்டு அம்சத்தை கோரி வருகின்றனர். இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கான முடிவெடுக்கப்படும் எனக் கூறி இருந்தார். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஒரு குழுவையும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஏற்படுத்தினார். இந்தக் குழு சமர்ப்பிக்கு எண்ணிக்கை அடிப்படையில் உள் இடஒதுக்கீடு முறைக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை தமிழக முதல்வர் அளித்து இருந்தார்.

இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை ஒட்டி வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டில் 10.5% ஒதுக்கீடு செய்து தமிழகச் சட்டப்பேரவையில் அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தற்போது தமிழக அரசிதழில் இந்தச் செய்தி இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த இடஒதுக்கீடு படி யார் யாரெல்லாம் பயனடைவர் என்ற தகவலையும் அரசிதழ் வெளியிட்டு உள்ளது.

மேலும் தற்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வரும் ஆய்வுக்குழு இதற்கான அறிக்கையை அடுத்த 6 மாதத்திற்குள் வெயிடும்போது இதற்கான நிரந்தர அரசாணை மீண்டும் தமிழசச் சட்டச்சபையில் கொண்டு வரப்படும் என்ற உத்தரவாதத்தையும் தமிழக முதல்வர் அளித்து உள்ளார் . இந்த அறிவிப்பை ஒட்டி வன்னியர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

எடப்பாடி வடிவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையே பார்த்தேன்… புகழ்ந்து தள்ளும் முக்கிய அமைச்சர்!

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையர் டெல்லியில் இருந்து கடந்த 26 ஆம் தேதி மாலை வெளியிட்டார்.

அரபு ஸ்டைலில் வெரைட்டி காட்டும் நடிகை ராய் லட்சுமி… வைரல் வீடியோ!

தமிழில் “கற்க கசடற“ படத்தில் லட்சுமி ராய் என்ற பெயரில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. பின்னர் தன்னுடைய பெயரை நியூமரலாஜிபடி மாற்றிக் கொண்டதும் ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்றுதான்.

சிறு வயதில் சூப்பர் ஸ்டாரின் இந்தப் பாடலுக்கு நான் அடிமை… முன்னணி நடிகரின் மலரும் நினைவுகள்!

நடிகர் சூர்யாவின் தம்பியும் தற்போது தமிழில் முன்னணி நடிகராகவும் இருந்து வரும் நடிகர் கார்த்தி,

பாதிக்கும் மேற்பட்ட சேலையை கட் செய்த 'குக் வித் கோமாளி' பவித்ரா: கவர்ச்சி புகைப்படம் வைரல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

நடிகை வரலட்சுமி வெளியிட்ட கொரோனா தடுப்பூசி வீடியோ!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது தெரிந்தது. இன்று காலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி