close
Choose your channels

உங்க உடம்புல செல்போனை வைக்கக் கூடாத 10 ஆபத்தான இடங்கள் பற்றி தெரியுமா???

Wednesday, July 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உங்க உடம்புல செல்போனை வைக்கக் கூடாத 10 ஆபத்தான இடங்கள் பற்றி தெரியுமா???

 

மனிதர்களின் ஆறாம் விரலாக மாறிவிட்ட செல்போன் இல்லாத மனிதரைத் தேடித்தான் பிடிக்க வேண்டும் என்ற நிலைமைக்குத் மனித சமூக தள்ளப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் செல்போன் பயன்பாடு மாறியிருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை நமது விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். செல்போனை தகவல் தொடர்புக்கு மட்டும் பயன்படுத்தினால் பரவாயில்லை. தூங்கும் போது, படிக்கும் போது, நடை பயிற்சி செய்யும் போது, ஏன் கழிவறைக்கும் சிலர் செல்போனை எடுத்துச் செல்கின்றனர். இப்படி மனித உடலோடு மிகவும் நெருக்கமாக செல்போன்களை வைத்திருப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகின்றன.

செல்போன்கள் மின்காந்த கதிர் வீச்சுகளோடு தொடர்புடையது. செல்போன்களை நாம் உடம்போடு ஒட்டி வைப்பதால் அது உடம்பிலும் கதிர் வீச்சுகளை வெளிப்படுத்தும். அப்படி கதிர் வீச்சுகளை வெளிப்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும். ஏன் சில புற்று நோய்க்கு அடிப்படை காரணமாகக் கூட இந்த செல்போன்கள் இருக்கலாம் என ஆய்வாளர்கள் பயமுறுத்தவும் செய்கின்றனர். இதனால் உடம்போடு நெருக்கமாக இருக்கும் வகையில் செல்போன்களை வைக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். உடலைத் தவிர சில தட்ப வெட்ப நிலைகள் செல்போன்களுக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். அதனால் வைக்கக் கூடாத 10 ஆபத்தான இடங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

1.பின் பாக்கெட்: செல்போன்களை பெரும்பலான ஆண்கள் பின் பாக்கெட்டில் வைக்கின்றனர். இன்றைய காலக் கட்டத்தில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான போன்கள் ஸ்கீரின் டைப் உள்ள போன்களாகவே இருக்கிறது. தொடுதிரை அமைப்பினால் நமக்கே தெரியாமல் பலருக்கு அழைப்பு சென்று விடுவதற்கும் வாய்ப்பு அதிகம். சில நேரங்களில் அஜாக்கிரதை காரணமாக உடைந்து போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ஸ்டைலாக பின் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சுற்றுவதைத் தவிர்க்கலாம்.

2.முன் பாக்கெட்: மருத்துவர்களின் பார்வையில் இது மிகவும் மோசமான பழக்கமாக பார்க்கப் படுகிறது. செல்போன்களில் வெளியிடும் கதிர் வீச்சுகளினால் ஆண்களுக்கு ஆண் தன்மையே கெட்டு விடும் ஆபத்தும் வருவதாகவும் கூறுகின்றனர். விந்தின் தரம் குறைந்து போவது, அளவு குறைந்து போவது போன்ற கோளாறுகளை செல்போன் கதிர் வீச்சுகள் ஏற்படுத்தி விடுவதாக சில ஆய்வுகள் வெளியாகி இருக்கிறது. செல்போன்கள் அதிக வெப்பத்தை வெளியிடும் திறனைக் கொண்டது என்பதால் ஆண்களின் உடல் வெப்பமாகி இத்தனை சிக்கலையும் கொண்டு வந்துவிடும். சட்டைப் பகுதியில் செல்போன்களை வைப்பதால் சில நேரங்களில் இதயக் கோளாறையும் இது ஏற்படுத்தி விடுவதாகக் கூறப்படுகிறது.

3.உள்ளாடை: ஆண்கள் பின் பாக்கெட், முன் பாக்கெட் என்று தேவையில்லாத சிக்கலில் மாட்டிக் கொள்வது மாதிரி சில பெண்களும் செல்போனை உள்ளாடை பகுதிக்குள் வைத்து பெரும் ஆபத்தில் மாட்டிக் கொள்கின்றனர். மேலாடையைத் தாண்டி செல்போனை வைப்பதால் செல்போன்களின் கதிர் வீச்சு மிக அதிகமாகவே உடலில் உணரப்படும். இப்படி செல்போனை பயன்படுத்தும் பெரும்பாலான பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதாகவும் ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

4.இடுப்பு பகுதி: இடுப்பு பகுதி, தொடை பகுதியை ஒட்டி இருக்குமாறு செல்போனை பயன்படுத்துவதால் இடும்பு பகுதியில் இருக்கும் எலும்புகள் மிகவும் பலவீனம் அடைந்து விடுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இடும்பு எலும்பு என்பது மனித உடலை தூக்கி நிறுத்தும் ஆதாரத் தன்மை கொண்டது. அந்த எலும்புகளே சுக்கு நூறாகிவிட்டால் மனிதர்களின் நிலைமை அவ்வளவுதான். இடும்பு எலும்பினை தொடும் வகையில் செல்போன்களை நெருக்கமாக பயன்படுத்தக் கூடாது எனவும் சுட்டிக் காட்டுகின்றனர்.

5.சார்ஜிங்: பொதுவாக செல்போன்களை சார்ஜ் செய்வதால் எந்த ஆபத்தும் நேராது. ஆனால் சார்ஜரில் செல்போனை போட்டு விட்டு பயன்படுத்தினாலே அல்லது நெருக்கமாக அமர்ந்து இருந்தாலோ பிரச்சனைதான். பெரும்பாலான செல்போன்கள் சார்ஜரில் இருக்கும்போது அதிக வெப்பத்தை வெளியிடும். அப்படியிருக்கும் போது அதை பயன்படுத்தினால் சில நேரங்களில் அது வெடித்து விடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே செல்போன்களை ஒரு நாளைக்கு ஒரு தடவை என சார்ஜ் போட்டு முறையாக பயன்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்கின்றனர். அடிக்கடி சார்ஜ் பண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அந்த செல்போன் காலாவதி ஆகிவிட்டது என அர்த்தம். அதை தொலைத்துக் கட்டிவிட்டு புது போனை வாங்குவதே உடல் நலத்திற்கு நல்லது.

6.சருமப் பகுதி: பொதுவாக செல்போனில் பேசும்போது காது, கன்னம் போன்ற பகுதிகளை ஒட்டி வைத்தவாறு பயன்படுத்துகிறோம். இது அடிப்படையில் தவறு என்பதையும் மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 0.5-1.5 சென்டி மீட்டர் இடைவெளி இருக்குமாறு வைத்துக் கொண்டு பேசவேண்டும். இதனால் கதிர் வீச்சுத் தன்மை சற்று குறைவாக இருக்கும். சரும பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். பட்டன் வைத்த போனை கண்டபடி உடம்போடு நெருக்கமாக வைத்து இருந்தாலும் இதுதான் நிலைமை. பட்டன் போன்களில் பாக்டீரியாக்கள் தங்கியிருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே இதையும் தவிர்க்க வேண்டும்.

7.அதிக சூடு: செல்போன்கள் என்றாலே சூடுதான். ஆனால் அதிக வெப்பமான இடங்களில் வைத்தால் செல்போனுக்கே ஆபத்தாக முடிந்து விடும். அடுப்பு, அதிகமான நெருப்பு போன்ற பகுதிகளில் செல்போன்களை வைத்து இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

8.அதிக குளிர்: சூடுதான் ஆபத்து என்றால் குளிருமா என்ற கேள்வி வரலாம். அதிக குளிரும் செல்போன்களை பாழாக்கிவிடும். குளிர் தன்மை செல்போன்களின் செயல் திறனை ஒடுக்கிவிடும். அதிலுள்ள அனைத்து இயந்திர நிலைமைகளும் ஒடுங்கி செல்போன்கள் செயலற்ற நிலைமைக்கு மாற்றிவிடும். எனவே குளிரான பகுதியில் வசிப்பவர்கள் சற்று வெப்பம் மிகுந்த செல்போன்களை வாங்குவதே நல்லது.

9. குழந்தைக்கு அருகில்: நாமதான் வீணா போறோம். இதில் குழந்தைகளையும் ஏன் சேர்க்க வேண்டும். சிலர் பச்சிளம் குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு மணிக்கணக்காக செல்போன்களைப் பயன்படுத்து கின்றனர். சில நேரங்களில் குழந்தைகள் தூங்கும் இடங்களிலும் வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் வரப்போகும் ஆபத்துகளை சிறிதும் உணராமலே இந்தத் தவறை பெரும்பாலான தாய்மார்கள் செய்து வருகின்றனர். செல்போன் வெளிப்படுத்தும் கதிர் வீச்சினால் குழந்தைகளுக்கு கவனக்குறைவு, செயல் திறன் குறைவு போன்ற ஆபத்துகள் வருவதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. இதனால் குழந்தைகளுக்கு பக்கத்தில் செல்போன்களை கொண்டு போவதை குறைப்பது மிகவும் நல்லது.

10. தலையணைக்கு அடியில்: நம்மில் பெரும்பாலானவர்கள் தூங்கும் வரை செல்போனை பயன்படுத்தி விட்டு அப்படியே பக்கத்திலோ அல்லது தலையணைக்கு அடியிலோ வைத்து விட்டு உறங்கிவிடுகிறோம். இதெல்லாம் ஒரு விஷயமா என்ற அளவிற்கு இந்தப் பழக்கம் தற்போது சர்வ சாதாரணமாகி விட்டது. செல்போன்கள் வெளிப்படுத்தும் கதிர் வீச்சினால் தலை வலி, தலைச் சுற்றல், பித்தம் போன்ற எக்கச் சக்கமான ஆபத்துக்களை ஏற்படுத்தி விடுகிறது என நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு தெரிவதில்லை. அதனால் தூங்கும் போது செல்போனை முடிந்த அளவிற்கு அதிக தூரத்தில் வைக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.